ஐ.ஏ.எஸ்.கள் களையெடுப்பும் புதிய பொறுப்புகளும்!

Share

தமிழகத்தில் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும், அவர்களின் புதிய பொறுப்புகளும் வருமாறு. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட உத்தரவு:

1. கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த கே.கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. இண்ட்கோசர்வ் (INDCOSERVE) முதன்மைச் செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த தீரஜ் குமார், உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. டிட்கோ (TIDCO) நிர்வாக இயக்குநராக இருந்த காக்கர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த குமார் ஜெயந்த், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை ஆணையர் – 1 ஆக இருந்த ஹித்தேஷ் குமார், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக இருந்த கார்த்திகேயன், நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. போக்குவரத்துத் துறைச் செயலாளராக இருந்த சமயமூர்த்தி, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11. பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த சந்திர மோகன், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13. தொழில்துறை சிறப்புச் செயலாளராக இருந்த அருண் ராய், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா, போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

15. உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த செல்வி பூர்வா, கைத்தறி, கைவினைப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

16. பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த மணிவாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

17. நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

18. வெளிநாட்டு மனிதவளக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், எரிசக்தித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

19. கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக இருந்த மைதிலி கே.ராஜேந்திரன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

20. கைத்தறி, கைவினைப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த ஷம்பு கல்லோலிகர், சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத்திட்டத்தின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

21. சமூக பாதுகாப்புத்துறை ஆணையராக இருந்த லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்”.

Leave A Reply