மலம் கலந்த குடிநீர் தொட்டியை முதலில் இடித்து தள்ளுங்க..! – Nilaa Bharathi

Share
நீங்க ஆளுநரை விரட்டுங்க, விரட்டாம போங்க..(அவன் ஓட்னாலும் உள்ள இருந்தாலும் ஒன்னும் கிழிக்க முடியாது. Constitution la வெத்து வேட்டு.)
தமிழ்நாடுன்னு பெயர் வச்சா வைங்க இல்லனா அந்த வெளங்காத ஒன்றியம்னு கூட பேர வச்சிக்கோங்க..தமிழுணர்வே இங்க சாதி உணர்வு தான்.
இறையூர் தண்ணி தொட்டி இடிச்சு வேற தொட்டி கட்டி கொடுப்போம்னு அரசு சார்பில் அறிவிப்பு வருவதே சமூக நீதி.அதுவே அந்த ஊர் பஞ்சாயத்துக்கு பெரியாரின்..தடியடி..
அரசு இறங்கலன்னா தனித்தொகுதியில் ஜெயித்தவர்கள் ஏன் சும்மா இருக்கீங்க?அதுக்கா ஓட்டு போட்டு உள்ள உட்கார வச்சுருக்காங்க..43 பேர் பத்தாதா?ஒரு தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வைக்க…
பேசுங்க.. தொட்டி பார்க்கும் போதெல்லாம் காய்ச்சலில் துடித்த குழந்தை நியாபகம் தான் வருது. உங்களுக்கு மட்டும் நினைவு வராதா? திராவிட உணர்வுன்னா ஒரே உணர்வு தானே.
குடிக்குற தண்ணீரில் மல நாற்றம் அடிக்குது.. மனிதனை மனிதன் சாதி வெறியில் கொல்லும் செயல்களில் பொறுப்பெடுத்து புதுதொட்டி கட்டி தருவோம்னு அறிவிக்க இன்னும் எத்தனை நாள் தேவைப்படும்?
-முகநூல் வழியாக

Leave A Reply