டைனோசர் காலத்திற்கு முற்பட்ட ஜெல்லி மீன்கள் இலங்கையில்!-

Share

இலங்கையில் டைனோசர் காலத்துக்கு பல மில்லியன் ஆண்டுகள் முன்பாக உருவானவை என்று நம்பப்படும் ஜெல்லி மீன்களை வயம்ப பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.

மேலும், இந்தப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் இலங்கையின் கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற, ஜெல்லி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை, பூமியில் டைனோசர்களுக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்தவை என்று வட மேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் வசிப்பதாக முன்னர் அறியப்படாத குறைந்தது 10 இனங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு வய ஜெல் சர்வே என பெயரிடப்பட்டது.

அறிவியலுக்கு புதிதாக ஒரு ஜெல்லி மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெல்லிமீனுக்கு ‘கெரிப்டியா வயம்ப’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave A Reply