பாஜகவில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கும் அண்ணாமலைக்கு ஜே..!

Share

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக யார் இருந்தாலும் இங்கு பார்ப்பனர்களின் அடிமைகளாகவே செயல்பட வேண்டும். இதுதான் உண்மையான நிலை.

அந்தக் கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த சமயத்தில்தான், தமிழ்நாடு முழுக்க பாஜகவுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. தினமும் அவர் தாமரை மலர்ந்தே தீரும்னு கத்திக்கொண்டே இருந்தார்.

தொலைக்காட்சிகளை அவர் சந்தித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக, எல்.முருகன் தலைவரானவுடன் அவரும் சில ஸ்டண்ட்டுகளை செய்து, யாத்திரைகளை நடத்தி பாஜகவை ஆக்டிவ் மோடுக்கு கொண்டு சென்றார்.

ஆனால், அவர்களுடைய உழைப்பு முழுவதும், பார்ப்பன நிர்வாகிகளான் கே.டி.ராகவன், எச்.ராஜா போன்றவர்களால் கேலிக்கு உள்ளாகியது.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த எல்.முருகனுக்கு திடீரென்று மத்திய அமைச்சர் பொறுப்பை பாஜக மேலிடம் வழங்கியது. அடுத்த வாய்ப்பு, கொங்குமண்டலத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு கிடைத்தது.

கொங்குமண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள, அதிமுகவின் முக்கியமான வாக்குவங்கியாக இருக்கிற, அருந்ததியரைக் கவர எல்.முருகனுக்கும், கவுண்டர்களைக் கவர அண்ணாமலைக்கும் தலைவர் வாய்ப்புகளை பாஜக கொடுத்திருக்கிறது.

அண்ணாமலை தலைவரானவுடன் தனது தலைமைப் பொறுப்பை உறுதிப்படுத்த, பார்ப்பன நிர்வாகிகளின் இமேஜை டேமேஜ் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

அதன் ஒரு கட்டம்தான், பெரிய அறிவாளி மாதிரி பேசித்திரிந்த கே.டி.ராகவனின் அசிங்கம்புடிச்ச வீடியோ வெளியீடு. இந்த வீடியோவைத் தொடர்ந்து ராகவனின் முகம் கிழிந்து தொங்கியது. கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் ராஜினாமா செய்தார். இனி, ராகவன் தொலைக்காட்சிகளில் முகம்காட்ட முடியாது.

அதுபோலத்தான், எச்.ராஜா தேர்தலுக்கு கொடுத்த பணத்தில் வீடுகட்டுவதாக வெளியான தகவலும் அவரை பின்னுக்கு தள்ளிவிட்டது.

அண்ணாமலை அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்தை ஆதரித்தார். ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக பேட்டியளித்தார். இப்படியெல்லாம் பேசினால்தான் பாஜகவின் பார்ப்பன முகத்தை மாற்றமுடியும் என்று அவர் நினைக்கிறார். அதுமட்டுமின்றி, மதன் ரவிச்சந்திரனிடம் உள்ள இன்னும் பல பாலியல் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிடச் செய்து அவர்களையும் கட்சியிலிருந்து விலக்கி, தனது தலைமைப் பொறுப்பை அண்ணாமலை உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

Leave A Reply