கலைஞரிடம் இருந்த விலை மதிப்பற்ற பொருள்!

Share

ஒருமுறை தமிழர்கள் பேரவைகளின் அழைப்பை ஏற்று, கலைஞர் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினார்.

முதல் முறையாக வெளிநாடு சென்று திரும்புவதால் விலையுயர்ந்த பொருட்கள் அவரிடம் இருக்குமென்று கருதிய சென்னை விமான நிலையத்தில் திமிர் பிடித்த ஒரு அதிகாரி, “உங்களிடம் சோதனை செய்யலாமா?’ எனக் கேட்டார். “ஓ… தாராளமாய்” என்றார் கலைஞர்.

பரிசோதனை அதிகாரி, “உங்களிடம் விலையுயர்ந்த பொருட்கள் ஏதேனும் உள்ளனவா?”

“ஆம்” என்றார் கலைஞர்.

“நீங்கள் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டால் நல்லது” -இது அதிகாரி.

“பட்டியலிடத் தேவையில்லை. என்றாலும் ஒன்றே ஒன்றுதான். அதுவும் விலை மதிக்க முடியாததாகும்.”

“என்ன சார் அது”

“என்னிடமுள்ளது தமிழ் ஒன்றுதான்”

பரிசோதனை அதிகாரிகள் குபீரென சிரித்தனர். இது சிரிப்பதற்கான விஷயமா என்ன?

Leave A Reply