காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை திருப்பித்தர ரெடி – தோற்று கதறும் மோடி அரசு – Venkat Ramanujam

Share

காஷ்மீரில் #பாஜக வின் ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக தானே மாநில உரிமையை மற்றும் #article370 ஐ ஆகஸ்ட் மாதம் 2019 வருடத்தில் நீக்குகிறது..

இருபத்தி இரண்டு மாதம் கழித்து இப்போது மாநில உரிமையை கொடுக்கிறேன் வாருங்கள் பேச்சுவார்த்தைக்கு என காஷ்மீர் மாநில தலைவர்களை கெஞ்சி அழைக்கிறது..

கடுப்பான காஷ்மீர் அரசியல் தலைவர்கள் எல்லோரும் வரமுடியாது யாராவது இரண்டு பேரை அனுப்பி வைக்கிறோம் என கெடு விதிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன..

கடந்த 22 மாதத்தில் காஷ்மீர் மக்கள் பட்ட துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல..

அவர்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது.. அவர்களின் பொருளாதாரம் முற்றிலும் நாசமானது..
சரி முற்றிலும் தீவிரவாதமானது ஒழிந்து விட்டதா என்றால் அதுவும் இல்லை..

இது போதாதென்று எல்லைகளில் நடக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா துருப்புகளின் ஊடுருவலும் நின்றபாடில்லை..

ஸ்பெஷல் அந்தஸ்து பிரிவை நீக்கிவிட்டு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டு இனி காஷ்மீரில் சினிமா ஷூட்டிங் நடத்தலாம் என கொக்கரித்தார் ஒன்றிய அரசின் பிரதமர்..

ஷூட்டிங் பிரியரான அவர் இந்த இருபத்தி இரண்டு மாதத்தில் ஒரு முறையாவது காஷ்மீர் சென்று நடத்தினாரா என்றால் அதுவுமில்லை..

பலமுறை ஐரோப்பிய சபைகளில் முக்கியமாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனங்களுக்கு ஆளானது ஒன்றிய அரசின் முடிவு..

இது இந்திய அரசுக்கு முக்கியமாக வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு பல சங்கடங்களை தந்தது.

தற்போது சர்வதேச உலக நாடுகள் கையில் எடுக்கப் போகும் பிரச்சனைக்கு பயந்து மட்டுமா மோடியும் அமித் ஷாவும் குட்டி கரணம் போட தயாராகி விட்டார்கள்..

காஷ்மீர் விவகாரத்தில் 4G நெட்வொர்க்கை 15 மாதமாக நிறுத்தி வைத்த நிலையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அவர்களுக்கு அதை திருப்பி அளித்த அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தான் இன்றைக்கு தலைமை நீதிபதி..

காஷ்மீர் ஸ்பெஷல் அந்தஸ்து சட்ட நீக்க வழக்கும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என செய்திகள் வருகிறது..

இப்போது தெரிகிறதா சோழியன் குடுமி ஏன் சும்மா ஆடாது என்று..

காஷ்மீர் விவகாரத்தில் தான்தோன்றித்தனமாக நடந்து எதைத்தான் சாதித்தது இந்த இருபத்தி இரண்டு மாதத்தில் பாஜகவின் ஒன்றிய அரசு..

இவர்களுக்கு வெட்கமே இருக்காதா..யோசித்து எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்களா..

மொத்தத்தில் குரங்குகள் கையில் மாட்டிய மாலை இயற்கை எழில் கொஞ்சும் #காஷ்மீர் என்கிறார்கள் வருத்தத்துடன் சோதனைகள் பல தாங்கிய அந்த மாநில மக்கள்..

மாநிலத்தை யூனியன் பிரதேசமாக தான்தோன்றித்தனமாக மாற்றிவிட்டு,

தேன்கூட்டில் கல் எரிந்த பாஜக தற்போது செல்ல வழி தெரியாமல் முழி முழித்து விழிபிதுங்கி நிற்கிறது..

இந்திய மக்கள் கடும் வெறுப்பில் உள்ளார்கள்..இதனை உணர்ந்தே இனியாவது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து..
எந்த வகையிலும் பயன் தரா #rss சித்தாந்தத்தை தலைமேல் தூக்கிவைத்து..

எந்த வழியில் செல்ல முடியாமலும்.. செல்ல தெரியாமலும்..Visionless clueless என தத்தளிக்கும் மோடியை..

2024 தேர்தலில் பாஜகவின் ஆட்சியினை தயவு தாட்சிணியம் இன்றி தூக்கி எறியப்பட வேண்டும்..

தற்போது பெருவாரியான இந்திய ஜனங்களின் கருத்தாகவும் இதுவே கருத்தரித்தும் உள்ளது 🐝

#சவெரா

Leave A Reply