கிள்ளையில் குரங்குத் தொல்லைக்கு முடிவு!

Share

கிள்ளை பேரூராட்சியில் பல ஆண்டுகளாக குரங்குகள் அட்டகாசத்திற்கு அளவே இல்லை, வீடுகளில் கதவு திறந்து இருந்தால் உணவு பொருட்களை காலி செய்துவிடும், மாமரம், தென்னை, வாழைமரங்களில் ஒரு குருத்தை கூட விட்டு வைப்பது இல்லை..

எங்கள் வீட்டிலும் இப்படி குரங்குகள் பழங்கள் உணவுகளை காலி செய்யும். பொறுத்து கொண்டோம். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது வராண்டாவில் இருந்த தலைவர்கள் படத்தை குரங்குகள் கீழே தள்ளி உடைத்து வைத்திருந்தன.

இனியும் பொறுக்க முடியாது என்று நினைத்து குரங்குகளின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட விரும்பினேன். இத்தனைக்கும், கடந்த ஆண்டுகளில் எத்தனையோ முறை வனத்துறைக்கு கிராமமுக்கியஸ்தர்கள் புகார் கொடுத்திருந்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை. எனவே நாங்களே பேரூராட்சியின் மூலம் கள்ளக்குறிச்சியில் இருந்து குரங்கு பிடிப்பவாகளை வரவழைத்தோம். அவர்கள் கூண்டோடு வந்து குரங்குகளை பிடித்து சிறுப்பாக்கம் காப்பு காடுகளில் கொண்டுபோய் விட்டனர்.

-வழக்கறிஞர் கிள்ளை ரவிந்திரன்

Leave A Reply