இருளர் பழங்குடி மூத்த தொண்டரின் கட்சி அனுபவம்!

Share

கிள்ளை பேரூராட்சியின் துணைத்தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் இருளர் வகுப்பைச் சேர்ந்த முதிய கட்சிக்காரரின் அனுபவங்களை கேட்டறிந்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக இருளர் வாழ்வியலை பகிர்ந்து தன்னுடன் பகிர்ந்த அவருடைய கட்சி அனுபவங்களை மீண்டும் நினைவுபடுத்தக் கேட்டார். அந்த வீடியோ பதிவை பார்க்கலாம்…

இந்த வீடியோவில் 25 ஆண்டுகள் திமுகவில் இருளர் பழங்குடிகளின் பங்களிப்பை அவர் நினைவுபடுத்துகிறார்..

வி.பி.சிங் திமுக தலைமையகமான அறிவாலயத்தை திறந்தது முதல் சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் நடத்திய மாநாடு வரை பேசுகிறார். ஆயிரம் விளக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட முதல் தேர்தலில் கோலாட்டம் அடித்து வாக்கு சேகரித்ததையும், அன்பகத்தில் தங்கியபோது ஏற்பட்ட கால்வலிக்கு பரிவோடு கட்சிக்காரர்கள் ஒத்தடம் கொடுத்து ஆறுதல் சொன்னதையும் அவர் அசைபோடுகிறார்…

இப்படிப்பட்டவர்களால்தான் இன்று 5வது முறையாக கிள்ளை பேரூராட்சியின் 10வது வார்டில் திமுக பழங்குடி வேட்பாளர் மல்லிகா போட்டியின்றி தேர்வாகி, பேரூராட்சி தலைவராகவும் போட்டியின்றி தேர்வு பெறும் நிலையை திமுக உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

Leave A Reply