தேங்காய்ப்பால் பீஸ் புலாவ்

Share

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி-1 கப்
திக்கான தேங்காய்ப்பால் – 1/2 கப்
ஃப்ரெஷ் பட்டாணி – 100 கிராம்
பட்டை – 1 இன்ச் அளவு
கிராம்பு – 2
பச்சை மிளகாய் -2
தண்ணீர் – 1\4 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
முந்திரி – 3
பாதாம் – 3
பெரிய வெங்காயம் -1/2
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

குக்கரில் நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பட்டை, கிராம்பைச் சேர்த்து வதக்கவும். கூடவே இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். நறுக்கிய பச்சைமிளகாய், ஃப்ரெஷ் பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். கழுவிச் சுத்தம் செய்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து தேங்காய்ப்பால், தண்ணீருடன் போதுமான உப்பைச் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.

குறிப்பு

* கூடுமானவரை ஃப்ரெஷ் பட்டாணியை பயன்படுத்தவும். * காய்ந்த பட்டாணி என்றால் இரவே ஊற வைக்கவும்.
* எண்ணெயிலோ (அ) நெய்யிலோ பாஸ்மதி அரிசியை வதக்கி பயன்படுத்தினால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

Leave A Reply