நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 8 – ஆதனூர் சோழன்

Share

வீட்டுப்பாடம்

ராணிக்கு 9 வயது.

4ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு தினமும் பள்ளியில் இருந்து வீட்டுப் பாடம் கொடுப்பார்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தமிழ், ஆங்கிலம்.

கணக்கு என ஒவ்வொன்றிலும் எத்தனை பாடங்கள் வீட்டில் எழுதவேண்டும் என்பதை அம்மாவிடம் ராணி சொல்வாள்.

மாலை 6மணிக்கு வீட்டுப்பாடம் செய்ய ராணி உட்காருவாள். 8 மணிக்குள் அனைத்து வீட்டுப்பாடத்தையும் செய்துமுடிக்கவேண்டும் என அம்மா அவசரப்படுத்துவாள்.

இது சரியானது அல்ல, ராணி எந்தப் பாடத்தில் பலவீனம், எந்தப் பாடத்தை நன்றாக செய்வாள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அவளது திறனுக்கு ஏற்றவாறு வீட்டுப் பாடங்களை முடிக்க உரிய நேரம் கொடுக்க வேண்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் சோம்பலில்லாமல் பாடங்களை முடிக்க அவளுக்கு உதவவேண்டும்.

வேலைக்கு பழக்கப்படுத்தல்

ரவி 8ம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய அப்பா ஒரு பேன்சி ஸ்டோர் வைத்திருக்கிறார்.

பள்ளி விடுமுறை நாட்களில் ரவி அந்த கடைக்கு செல்வான். அப்பாவுக்கு உதவியாக வியாபாரம் பார்ப்பான்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசுவது?

அவர்கள் கேட்கும் பொருளை எப்படி எடுத்துத் தருவது?

பொருட்களை ரேக்கில் எப்படி வரிசையாவும் அழகாகவும் அடிக்கிவைப்பது?

பொருட்களை வாங்கி பணம் தருபவர்களுக்கு எப்படி மீதி சில்லரை தருவது?

போன்றவிஷயங்களை ரவிக்கு அவனுடைய அப்பா சொல்லித் தருவார்.

விளையாட போகாமல் 4 மணி நேரம் கடையில் தொடர்ந்து வேலை பார்த்தால் ரவிக்கு அவனது அப்பா 10 ரூபாய் சம்பளம் கொடுப்பார்.

இது போன்று குழந்தைகளை ஓய்வு நேரத்தில் வாய்ப்புள்ள வேலைகளில் ஈடுப்படுத்துவது நல்லது. குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை பார்ப்பதற்கு  இது உதவியாக இருக்கும்.

Leave A Reply