எல்லைதாண்டும் பகிஸ்தான் ஆடுகள்!

Share

“இந்த கோட்ட தாண்டி நானும் வரமாடான் நீயும் வரகூடாது. பேச்சு பேச்சாதா இருக்கனும்.”


வின்னர் படத்தில் வடிவேலு இப்படி ஒரு டைலாக் டாக் பேசுவார்.


இந்த டயலாக்கைப் போலதான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சர்வதேச எல்லை காட்டுப்பாட்டு கோடு ஒன்று உள்ளது.


அந்த கோட்டை இரு நாடுகளும் மீறக்கூடாது என்பது விதி. ஆனால் அந்த விதியை பாகிஸ்தானின் அபூர்வ விலங்காக கருதப்படும் மர்கோர்ஸ் என்ற திருகு கொம்பு ஆடுகள் மதிப்பதே இல்லை. அவற்றை இருநாட்டு எல்லை பாதுகாப்புப் படையினரும் கண்டுகொள்ளவதும் இல்லை.


அழிந்து வரும் இந்த விலங்கினத்தை வேட்டையாடுவதை தடைசெய்ய கடுமையான சட்டங்கள் உள்ளன. இமயமலை பகுதிகளில் உள்ள ஊசி இலை காடுகள்தான் இந்த ஆடுகளின் மேய்சல்பகுதி. எனவே வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லை காட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்த ஆடுகள் சுதந்திரமாக மேய்கின்றன.


கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் 150 ஆடுகள் மட்டுமே இருந்தன. இப்போது 200 ஆடுகள் என்ற அளவுக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


நவம்பர் 1ம் தேதி முதல் ஜனவரி வரை இவற்றின் இனப்பெருக்க காலம் என்பதால் இருநாட்டு எல்லை பகுதிகளிலும் இவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply