சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி மோடி மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

Share

இந்திய – சீனா எல்லைப் பகுதியில் தனது ராணுவத்தை விரைவாக கொண்டுபோகும் வகையில் பாங்காங் த்சோ ஏரியின் குறுக்கே பாலம் கட்டுகிறது சீனா. இதை கண்டிக்காமல், கேளாக் காதினராக மோடி இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பினார்.

ஏரியின் வடக்கு கரையை தெற்குக் கரையுடன் இணைக்கும் வகையில் இந்த பாலத்தை சீனா கட்டுகிறது. இதுகுறித்து ஆதாரத்துடன் செய்தி வெளியாகியும் பதில் பேசாமல் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கெனவே, எல்லையில் சீனா தனது ராணுவத்தினருக்கான குடியிருப்பையும் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply