அதிகாரத்தை கைப்பற்றி ஆலயங்களில் தமிழில் வழிபட ஆணை – சீமான் அதிரடி

Share

தமிழுக்கு தாய் நாடு உள்ளது சமஸ்கிரதத்திற்கு தனியே ஒரு மாவட்டமாவது உள்ளதா தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வழிபாடு வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கோவில் திருத்தலமான ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் வழி வழிபாட்டினை துவக்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் உலகில் மிக தொன்மையான மொழி தமிழ் தமிழ்நாட்டில் என் தாய்மொழி தமிழில் தான் வழிபாடு செய்ய வேண்டுமெனவும் சமஸ்கிருதம் பிறரால் திணிக்கப்பட்ட மொழியாக உள்ளதால் இந்த நாடு என்னுடையது கோவில் என்னுடையது கடவுள் தமிழ் கடவுள் வழிபாடு மட்டும் ஏன் சமஸ்கிருதத்தில் செய்ய வேண்டும் இன்று தமிழில் வழிபாடு செய்தோம் கேட்பதற்கு அருமையாக இருந்தது இது போன்று ஒவ்வொரு நாளும் இனி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அகலம் என சட்டம் உள்ளது ஆனால் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை அதற்கான தீர்வை இந்த அரசு வழங்கும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

Leave A Reply