எளிய மருத்துவக் குறிப்புகள் – 48. கர்ப்ப கால வயிற்று வலிக்கு…

Share

கர்ப்பம் ஏற்பட்டு ஆரம்ப காலத்தில் சிறு வலியாக இருந்தால் தாமரைப்பூ, சந்தனம், விலாமிச்சை வேர் இவைகளை நீர் வார்த்து அரைத்துக் காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கத் தீரும்.

நன்றாகச் சுத்தி செய்த சீரகத்தை அரைப்பலம் எடுத்துக் கொள்ளவும். ஆழாக்கு நீரில் இதைப் போட்டு நன்றாகக் காய்ச்சிவிடவும். இது அரை ஆழாக்காக வந்தவுடன் நெல்லிக்காயளவு வெண்ணெய் கலக்கிக் காலை வேளையில் குடிக்கக் குணம் காணலாம்.

இரண்டாம் மாதம் வயிற்று வலித்தால் தக்கோலமும் தாமரைப் பூவும் கரைத்து, காய்ச்சிய பாலில் கலந்து கொடுக்கக் குணமாகும்.

மூன்றாம் மாதம் வயிறு வலித்தால் வெண் தாமரை மலருடன், செங்கழுநீர்க்கிழங்கு அரைத்து பாலில் கலந்து கொடுக்கக் குணமாகும்.

நான்காம் மாதம் கர்ப்பம் வலித்து இரத்தம் கண்டால் நெய், தற்கிழங்கு, நொச்சிவேர் அரைத்து பாலில் கலந்து கொடுக்கக் குணமாகும்.

ஐந்தாம் மாதம் ஆம்பல் பூவும், விலாமிச்சை வேரும் அரைத்துக் காய்ச்சிய பாலில் கொடுக்கக் குணமாகும்.ஆறாம் மாதம் கர்ப்பக் குடல் அழன்று சுற்றிலும் வலித்தால் முந்திரிப்பழம், திப்பிலி, நெய்தற்கிழங்கு இம் மூன்றையும் நன்றாக அரைத்து பாலில் கலந்து குடிக்கவும்.

ஏழாம் மாதம் வயிறு வலித்தால் சந்தனம், விலாமிச்சை வேர் தக்கோலம் சேர்த்து அரைத்து பாலில் காய்ச்சிக் கொடுக்கக் குணமாகும்.

எட்டாம் மாதம் வயிறு மந்தமாக இருந்தால் தாமரைப்பூவும், நெய், தற்கிழங்கும் அரைத்துப் பாலில் கலந்து கொடுக்கவும்.

ஒன்பதாம் மாதம் மருதந்தோலும் அரசந்தோலும் அரைத்துக் காய்ச்சிய பாலில் கலந்து கொடுக்கத் தீரும்.

பத்தாம் மாதம் வலி இருந்தால் இலுப்பைப் பூவை அரைத்து காய்ச்சிய பாலில் கலந்து கொஞ்சம் சர்க்கரை கூட்டிச் சாப்பிட வலி இருக்காது. பத்தியம் தேவையில்லை.

Leave A Reply