சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

Share

இடைக்காட்டுச் சித்தர் வகார வித்தை ரகசியம்(தொடர்ச்சி)

இரும்பைப் பொன்னாக்கும் வாதரகசியம்

இரும்பு 1 பங்கு, வெறுப்பான செம்பு 1 வராகன் தாளகம் 1 களஞ்சி காரம் 1 பங்கு, பூரம், வீரம், துருசு ஒரு பங்கு துத்தம் யங்கு கௌரி ஒரு பங்கு, வெடியுப்பு ஒரு பங்கு, சீனம் 1 பங்கு, லிங்கம் ஒரு பங்கு, நாகம் 1 பங்கு, சூதம் 1 பங்கு இவற்றை எருக்கம்பாலில் அரைத்து ஒளியில் காய வைத்தல் வேண்டும்.

பின்னர் தீமூட்டி உலையில் வைத்து அதனை உருக்கி எடுத்துப் பார்க்க அயக்கலிங்கம் கிடைக்கும். அந்த அயக்கலிங்கம் பத்துக்கொன்றாக செம்பினை உருக்கிப்போட இரும்பு செம்பாகும். அச்செம்பில் பத்துக்கொன்றாய் வெள்ளியின் உருக்கிப்போட செம்பு வெள்ளியாகும். உள்ள வெள்ளியில் நாலில் ஒரு பங்கு தங்கம் சேர்த்துபுடத்தில்போட அனைத்துமே கட்டித்தங்கமாகும். பசுமை நிறமுடைய தங்கத்தில் உலகத்தோர் மயங்குவர் என்கிறார் சித்தர்.

செம்பை பொன்னாக்கல்

செம்பு 1 பலம் வீரம் கால் பங்கு, மதியப்பு கால் பங்கு சிற்றண்டம் கால் பங்கு, காரம் கால் பங்கு இவற்றை சேர்த்து உருக்க செம்பானது கசடுகள் நீங்கும்.

அதனைத் தகடாக்கி குக்குட புடத்தில் போட சுத்த செம்பு கிடைக்கும், அதனுடன் மூன்று பங்கு வெள்ளியையும் ஒரு பங்கு தங்கத்தையும் சேர்த்து உருக்கி எடுத்துபார்க்க நல்ல மாற்றுடைய பொன் கிடைக்கும்.

நாகத்தினை தங்கமாக்கல்

நாகம் 1 பலம் கெந்தகம் 1 பலம் தேவை. கெந்தகத்தை மஞ்சளில் நனைத்து தையிலமாக்க வேண்டும். அதனை நாகத்தில் விட நாகமானது கட்டிப்போகும். இதனை கரியோட்டில் சேர்க்க ஊதிப்போட எட்டுமாற்றுள்ள வெள்ளியாகும். ஏழுமாற்றாக மாறும்வெள்ளியுடன் இரண்டு பங்கு தங்கமேற்றி தகடாக அடித்துப்புடத்தில் போட அனைத்துமே தங்கமாகும்.

இரசத்தைப் பொன்னாக்கல்

அடிகணத்த சட்டியில் ஒருபடி உப்பினை எடுத்துக்கொண்டு கீழும் மேலும் கொட்டி கெந்தகத்தையும் இழும் மேலும் இட்டு இரண்டின் நடுவில் ஒரு பங்கு ரசத்தைவைத்து பத்து சாமம் வரையில் தீயினால் எரிக்கவேண்டும். பத்து சாமம் கழிந்தபிறகு எடுத்துப்பார்த்தால் செந்தூரம் கிடைக்கும். அது லிங்கம் போன்றிருக்கும். அதனுடன் பத்துக்கொன்று தங்கத்தினை சேர்த்து செய நீரால் இரண்டு முறை அரைக்க வேண்டும்.

பத்துக்கு ஒன்றான வெள்ளியையும் செம்பினையும் சேர்த்து உருக்கி எடுத்துப்பார்க்க கருப்பு நிறமுள்ள பொன்கிடைக்கும் ஊதிப்பார்க்க சிவந்த பொன்கிடைக்கும்.

அதனைத் தகடாக்கி புடத்தில்போட மாற்றுடைய தங்கம் கிடைக்கும். இதனுடன் நூலில் ஒரு பங்கு, தங்கம் சேர்த்து உருக்கி எடுக்க நல்ல மாற்றுடைய தங்கம் கிடைக்கும்.

வெள்ளியை பொன்னாக்கல்

ஆறுபங்கு வெள்ளி, அதனுடன் நான்கு பங்கு செம்பு, மூன்று பங்கு நாகம், இரண்டு பங்கு செம்பொன் இவற்றைச் சேர்த்து உருக்கி புடத்திலேபோட நல்ல எட்டு மாற்றுயர் பொன்னானது கிடைக்கும்.

துருசினைப் பொன்னாக மாற்றுதல்

கல்லுப்பு, மதியுப்பு, துருசு, காரம், சாரம், லிங்கம் பூணிறு, சீனம், துத்தம் இவற்றை முறையே கால்கால் பலம் கூட்டி ஜெயநீரைவிட்டு பத்து சாமம் அரைக்கவேண்டும். திரண்டு வரும் மெழுகுடன், பொன்னைச் சேர்த்து பூங்காவிக்குள் போட்டு ஊதசெம்பானது கட்டித் தங்கமாக மாறும். பசுந்தங்கமான இதற்கு ஈடுசெய்தல் என்பது இயலாது என்கிறார் சித்தர்.

கெந்தகத்தை பொன்னாக மாற்றுதல்

சாரம் நான்குபலம், கெந்தி ஐந்துபலம், வெண்காரம் இரண்டு பலம், பூரம் இரண்டு பலம், வீரம் ஒருபலம் என இவற்றை ஆடுதிண்ணா பாளை, சித்தர் முனி பத்து சாமம் நன்றாக களிம்புபோல அரைக்கவேண்டும். அரைத்ததை நி£லில் காயவைத்து சீசாவில் அடைத்து புட்டிக்கு சீலை மண்ணுக்கு செய்து சுத்தமான மண்தடவி வைத்து தைலம் வாங்கவேண்டும்.

அந்தத்தைலத்துடன் பொன்னை உருக்கி புடத்தில் போட கட்டித்தங்கமாக மாறும். பெண்மோகம்கொண்டு கெட்டு போவதால் புத்தியில்லாத முடிவாகும். துரிசு செந்தூரத்தை பணஎடைவீதம் தேனில்உட்கொள்ள உடல் கல்தூண்போல் ஆகும். நரைதிரை நீங்கும் உடல் நோய்யாவும் நீங்கும்.

வாதம் என்ற வெள்ளம் மடைதிறந்ததுபோல் உண்டாகும். இந்த உண்மையான முறையை உணர்ந்து செய்தால் எல்லாம் சித்தியாகும். விதியுள்ளவன் அறிந்துகொள்வான்.

உண்மையான முறையை அறிந்தவர்க்கு ரசவாதம் நிலைக்கும். நன்றாக உண்டு உறங்குபவர்களுக்கு ரசவாதம் சித்தியாகாது.

இப்படி இன்றி ரசவாதம் சிதியானவர்கள் யாருடனும் பேசாமல் பொறுமையாய் இருப்பார்கள். பதறாமல் செய்துபார்ப்பார் நல்ல நூல்களை விரும்பிபார்த்து கலக்க மின்றி படித்து கொள்வர்.

இந்த ரசவாத வித்தையில் துரிசு என்பது பெண் ஆகும். இதற்கு இரண்டு புருஷன் உண்டு. முதற்புருஷன் அயம் ஆகும். இது இரண்டும் சேர்த்து இதற்கு தாய் கெந்தகம் ஆகும் இந்த மூன்றையும் சேர்த்து எலுமிச்சம்பழச்சாறுவிட்டு அரைத்திட வேண்டும். அரைத்த வில்லை தட் காயவைத்து புடம்போட்டு உருக்கும்போது சத்துகிடைக்கும். துரிசுச் செம்பானது பொன்போன்று கிடைக்கும்.

இந்த மூன்றும் சேர்ந்தும் கிடைக்கும் இந்தச் செம்பு ஆணாகும். இந்த ஆணுக்கு ஆண் எதிரி என்பது வீரம் ஆகும். இந்த வீரத்தை முன்சத்தின் எடைக்கு பாதி சேர்த்து இதுக்கு தந்தை போன்ற எலுமிச்சம் பழச்சாறுவிட்டு நன்கு அரைத்து வில்லை தட்டி வைத்து பின் புடம்போட செம்பு பிரியும். இதற்கு பயன்படும் வங்கமே இரண்டாவது துரிசுன் புருசன் ஆகும்.

வெள்ளிச் செந்தூரம் சுத்தி முறைகள்

ஒரு பலம் சுத்தி செய்த வெள்ளிப்பொடியிற் பாதிச்சாறு தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு, நிலப்பனைக்கிழங்குச்சாறு சித்திர மூலச்சாறு இவற்றைத் தனித்தனியாய்விட்டு முறைப்படி அரைத்து வில்லை செய்து உலர்த்தி கலசித்து புடமிட்டு எடுக்க செந்தூரமாகும்.

அஞ்சனக்கல் சுத்தி முறைகள்

மாதுளம்பழச்சாற்றில் அஞ்சனக் கல்லை ஊறவைத்து தெடுத்தாலும் சுத்தியாகும்.

கந்தக சுத்தி முறைகள்

மருதோன்றி கல்கத்தைப் பசுவின் தயிரில் கலந்து ஒரு சட்டியிலிட்டு சீலையால் வேடுகட்டி மேலே கந்தகத்தை வைத்து மற்றொரு சட்டியால் மூடிச்சீலைசெய்து குழியில்வைத்து மேல்சட்டி மேல் ஐந்து வறட்டி கொண்டு புடமிட கந்தகம் உருகி கீழிறங்கும். சேகரித்துக்கொள்ளவும் இவ்விதம் ஏழுமுறை செய்யவும்.

புஷ்பராகச் சுத்தி முறைகள்

புஷ்பராகத்தை வெள்ளாட்டு மூத்திரத்திலிட்டு இரண்டு சாமம் வெயிலில் வைத்து எடுத்து வெந்நீரில் கழுவி எடுக்கச் சுத்தியாகும்.

தங்கச் செந்தூரம் சுத்தி முறைகள்

சுத்தி செய்த பொன்னை ஈசலிறகுபோல மெல்லிய தகடாகத் தட்டி, கந்தகத்திற்கு கருப்பஞ்சாறு விட்டரைத்து மேற்படி தகட்டிற்கு பூசி உலர உலர ஏழுதடவை பூசி அகலிலிட்டு மூடிச்சீலை ªச்யது கஜபுட மிட்டால் செந்தூரம்மாகும்.

வெள்ளை பாஷாண சுத்தி முறைகள்

ஒரு பலம் (35 கிராம்) வெள்ளைப்பாஷாணத்தைப் பொடித்து சற்றுத் தளர்ச்சியாய் முரட்டுதுணியில் முடிந்து கொண்டு ஒருபலம் மிளகை நீர்விட்டு அரைத்து ஒருபடி சிறு கீரைச்சாற்றில் கரைத்து மண்பாண்டத்தில் இட்டு அதில் பாஷாண முடிப்பை கீழிகட்டிப்பாண்டத்தின் அடியில் படாமல் தொங்கவிடு அடுப்பேற்றி சிறு தீ கொண்டு எரித்து சாறு சுண்டியவுடன் இறக்கி நீர்விட்டு பாஷாணத்தை கழுவி எடுத்துக்கொள்ளவும் இவ்விதம் மும்முறை செய்யச் சுத்தியாகும்.

பூரம் சுத்தி முறைகள்

கம்மாறு வெற்றிலை, மிளகு ஆகிய இரண்டையும் கால்பங்கு (8.75 கிராம்) வீதம் நிரந்தெடுத்துச்சிறிது நீர்விட்டு அரைத்து கற்கத்தை ஒரு ( 13 லிட்டர்) நீரில் கலந்து ஒரு பலம் (35 கிராம்) பூரத்தை சீலையால் முடிந்து, துலாயந்திரமாய் நீரில் அமிழும்படி செய்து சிறு தீயால் எரிக்கவேண்டும். நீர் முக்காற் பங்கு சுண்டிய பிறகு, பூரத்தை எடுத்து நீர்விட்டுக் கழுவி வெயிலில் உலர்த் எடுக்க சுத்தியாகும்.

வெடியுப்பு சுத்தி முறைகள்

இந்த உப்பு ஒரு பங்கிற்கு நான்கு பங்கு தண்ணீர்விட்டு அடுப்பேற்றி சிறு தீயால் எரித்துக் கொதி கிளம்பும்போது ஒரு வீசை (1400 கிராம்) உப்புக்கு நான்கு கோழிமுட்டை வெண்கருவைச் சேர்க்க வேண்டும். மேலே அழுக்குத்திரளும்.

அதனை அகப்பையால் வழித்து நீக்கி உறையும் பதத்தில் மறு சட்டியில் சீலைகட்டி அதில் வடித்து காற்றில்லா விடத்தில் வைத்து மறுநாள் நீரை வடித்துவிட்டு சூரிய ஒளியில் உப்பை உலர்த்தவும். இவ்வாறு ஏழுமுறை செய்யச் சுத்தியாகும்.

கருவங்கப் பஷ்பச் சுத்தி முறைகள்

இலைக்கள்ளிச் சாற்றைக் கருவங்கத்திலிட்டு மூன்று நாளரைத்து வில்லை செய்து லர்த்திப் புடமிட்டுடெடுக்கப்பஷ்மாகும். இப்பஷ்பத்தால் காசம் நீங்கி ஆகம் தங்கத்தைப்போலாகும் என்பர்.

நாகம் சுத்தி முறைகள்

ஒரு சட்டியில் இலுப்பை நெய்யை ஊற்றி, இரண்டு நவச்சாரக்கட்டியெடுத்து அந்த இலுப்பை நெய்யுள்ள சட்டியின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்து ஒன்றான அக்கட்டிகளை அந்நெய்யில் அரைக்கட்டி முழுகும்படி வைத்து துத்த நாகத்தை இரும்பு சட்டியிலிட்டு உலையில் வைத்து குலுக்கி உருக்கி 21 முறை அந்நெய்யில் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் கழுவி உருக்கவேண்டும்.

சூடன் சுத்திமுறைகள்

இச்சரக்கை செங்கழுநீர்ப்புட்ப சாற்றில் ஒரு நாழிகை ஊறவைத்துதெடுத்து வெய்யிலில் உலர்த்தி எடுக்க சுத்தியாகும்.

மிருதாருசிங்கி சுத்தி முறைகள்

இதனை வெள்ளாட்டு நீரில் காய்ச்சி எடுத்துக் பிறகு முலைப்பால், வெள்ளாட்டுப்பால் இவற்றில் முறையே பத்து நாழிகை ஊறவைத்து தெடுக்கச்சுத்தியாகும்.

அயச் செந்தூர சுத்தி முறை

ஒதியம் பட்டையிற் காடி தெளித்து இடித்து சாறு பிழிந்து குழிக்கல்லிட்டு அதில் அயப்பொடியை சேர்த்து மூன்று நாள் வெயிலில் வைத்து நான்காம்நாள் அச்சாறுவிட்டு அரைத்து வில்லை செய்து உலர்த்தி ஓட்டிலிட்டு ஓட்டு மூடி ஏழு சீலை செய்து உலர்த்தி கஜபுடமிட்டெடுக்கவும் இம்மாதிரியே எட்டுபுடமிட்டு பிறகு காடி நீர் தெளிக்காமல் ஒதியம்பட்டை சாறுவிட்டு அரைத்து மூன்று புடமிட்டெடுக்க செந்தூரமாகும்.

வெள்ளிப்பஷ்பம் சுத்தி முறைகள்

வெள்ளி, கந்தகம், திமிளை ஆகியவற்றை ஒவ்வொருபங்கு எடுத்துக்கொண்டு கந்தியையும் திமிளையும் எருக்கம்பால்விட்டு நான்கு சாமம் அரைத்து வெள்ளியைத் தகடாகத்தட்டி அதன் இருபுறமும் பூசி உலர்த்தி அகலிலிட்டு ஏழுசீலை மண் வலுவாய்ச் செய்து ஒருநாள் உலர்த்தி கஜபுடமிடப்பஷ்மாகும்.

வெள்ளிப்பஷ்பம் சுத்தி முறைகள்

தேய்ந்த பழைய உளியை உலையிலிட்டு காய்ச்சி வெள்ளாட்டுப்பிச்சில் தோய்க்க வெட்டையாகும். வெட்டையாகும் வரை தோய்க்கவும் ஒவ்வொரு முறையும் புதிய பிச்சை உபயோகிக்கவேண்டும்.

வங்கத்தின் சுத்தி முறைகள்

நொச்சிச் சாற்றில் மஞ்சள் பொடியைக் கலந்து வைத்துக் கொண்டு அதில் வங்கத்தை உருக்கிச் சாய்க்கவும் இப்படி இரு மூறை செய்ய சுத்தியாகும். வங்கப்பொடியை நொச்சி சாற்றிலிட்டு வெயிலில் வைத்தாலும் சுத்தியாகும்.

தொடரும்

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

Leave A Reply