சிந்தனைக் களம் 10 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share
அவன் ஆம்பிளப்பிள்ளை,நீ பொம்பிளைப் பிள்ளை விட்டுக்கொடு என்ற வார்த்தையுடன் ஆம்பிளைப் பிள்ளைகளின் எண்ணத்தில் தாய்/தந்தையர் பெண்ணைப் பற்றி அவள் குறைந்தவள் என்ற தவறான சிந்தனையை விதைத்து விடுகிறார்கள் அவர்களை அறியாமலே.
இது பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஊட்டி சுயமரியாதையை இழக்க வைக்க, ஆணுக்கு ஆணவத்தை ஊட்டிவிடுகிறது.
இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தாத தன்மை கொண்டது.
இதுவே பல பிரச்சனைகளுக்கான ஆரம்ப அடியாகும்.
ஆண்கள் கணவர் என்ற பட்டத்தினை பெற்றதும் ஆணவத்தை காட்டுவதும்,
தன்நம்பிக்கை குறைந்த பெண் கோபப்படுவதும் , சந்தேகம் கொள்வதும் , தன்னை அடிமைப்படுத்துகிறாரோ என பயந்து சண்டை போடுவதும், பெற்றோர் சிறுவயதில் விதைத்த விதையினால் உருவாகும் பிரச்சனைகளாகும்.
வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
ஆரம்ப வாழ்க்கைக்கும், அவர்களது பழக்கவளக்கங்களுக்கும் நிறையவே தொடர்புண்டு.
ஆனால் நாம் எமது வாழ்க்கையை நல்லபடியாக மாற்றிக் கொள்ளும் வல்லமை கொண்டவர்கள்.
அதனால் பெற்றவர்களை குறைகூறாமல் உங்களை முன்னேற்ற முயலுங்கள்.
குற்றம் கண்டுபிடிப்பதால் யாரின் வாழ்க்கையும் முன்னேறுவதில்லை.
உணர்தல் ஒன்றே பயன்தரும்.
பெற்றோரே!
பெண்பிள்ளைகளை அடக்குவதும், ஆண்பிள்ளைகளுக்கு அதிகாரத்தை கொடுப்பதும் நன்மையானதல்ல.
அதுவே உங்கள் வயோதிகத்தை நரகமாக்கிவிடும்.
‘குற்றம் குறை கூறுவதால் நன்மை வருவதில்லை.
என்னை நான் மாற்றி நன்றாக வாழ்வேன் என்ற பிடிவாதமே நன்மை தரும்’
சிந்திக்கவும்!

Leave A Reply