சிந்தனைக் களம் 12 – Bamini Rajeshwaramudaliyar

Share
உங்கள் வாழ்க்கையில் யாரையும் முக்கியப்படுத்தாதீர்கள்.
அவர்களை பற்றி உங்களுக்கு முழுமையாகத் தெரியாது.
மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்.
வெகுசிலர் மட்டுமே தம் நற்குணத்தை
எந்த சூழலிலும் மாற்றாதவர்கள்.
நீங்கள் உங்களை விட அடுத்தவரை முக்கியப்படுத்துவதால்தான் அவர்கள் உங்களை குறைத்து அவமானப்படுத்தி இலகுவாக பேசிவிடுகிறார்கள்.
அப்போது முறிவு வந்ததும் நொந்து போகிறீர்கள்.
எவ்வளவு அன்பைப் பொழிந்தாலும் உங்கள் இரகசியங்களை கூறாதீர்கள். அதுவே நாளை உங்களுக்கு எறியும் கல்லாக மாறிவிடும்.
சந்தர்ப்பம் சூழ்நிலை மாற தாமும் மாறுவோம் என்பது அவர்களுக்கே தெரியாது.
உங்கள் உயர்வு / முன்னேற்றம், அவர்களுக்குள் தூங்கி கொண்டிருக்கும் பொறாமை என்ற அரக்கனை உலுப்பிவிட தேவையற்ற பேச்சுக்கள் ஆரம்பமாகும்.
உங்கள் முன்னேற்றத்தை வாழ்த்துபவர்கள் பெருமையுடன் நோக்குபவர்கள் ஒருவர் இருவராகத்தான் இருக்கும்.
அதனால் யாருடன் பழகினாலும் கவனத்துடன் பழகுங்கள்.
பலமுகங்களை கொண்ட மனிதர்களுடன் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
இடத்திற்கு ஆட்களுக்கு ஏற்ற போல் தம்மை , தமது பேச்சை, தமது செய்கைகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
பலயீனமான மனிதர் என நம்புபவர்களிடம் தனியையான சந்தர்ப்பம் கிடைக்கும் போது கொடூரத்தை காட்டுவார்கள்.
இவர்களை மற்றவர்கள் நல்லவர் என்றே புகழ்வார்கள்.
அதற்காக அவர்களுடன் சேர்ந்து நீங்களும் ஒத்துப் பாடாமல் இருங்கள்.
தனித்துவமான மனிதராக இருக்க அஞ்சாதீர்கள்.
இவைகள் அண்மையில் நான் கண்டதை உணர்ந்ததை என்னால் முயன்றளவு புரியும்படியாக கூறுகிறேனே குறை கூறவில்லை.
இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
https://www.uthayamugam.com/series/sinthanai-kalam-13/

Leave A Reply