சிந்தனைக் களம் 19 – Bamini Rajeswaramudaliyar

Share

உங்கள் சிந்தனையே உங்கள் வாழ்க்கை என்பதை இலகுவாக புரிய வைக்க முயல்கிறேன்.

search engineஇல் எதையாவது தேடியபின், மூடிவைத்து விட்டு மீண்டும் திறக்கும் போது, நீங்கள் பார்த்ததை பற்றிய விடையங்கள், விளம்பரங்கள் முகப்புத்தகத்தில் கூட எட்டிப் பார்க்கும்.

அதனை ஒத்த விடையங்களை ஒருவேளை உங்களுக்கு இது பிடிக்கக் கூடும் என இயந்திரம் கூறும்.

அதனைப் போலவே எதிரொலிக்கும் தன்மை கொண்ட இந்த பிரபஞ்சமும் நீங்கள் நினைப்பதை பேசுவதை ஒத்த விடையங்களை, மனிதர்களை உங்கள் முன் கொண்டுவந்து சேர்க்கிறது. சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

search engine போன்ற தன்மை கொண்ட பிரபஞ்சம் நீங்கள் நினைப்பதை, கேட்பதை, நீங்கள் பயன்படுத்தும் சொற்களுக்குரிய பலனை அள்ளித் தருகிறது.

எதிர்மறை எண்ணத்தில் பேசும் போது வரும் சக்தி நேர்மறை சிந்தனையில் இருப்பதில்லை.

சிந்தித்தால்தான்தான் புரியும்.

உதாரணமாக கோபத்தில் திட்டும் போது வரும் சக்தி , வாழ்த்தும் போது வருவதுண்டா?

பயப்படும் போது வரும் சக்தி, அனைத்தும் நல்லபடியாக என்று நினைக்கும் போது வருவதுண்டா?

ஆழமான உணர்வுகள் அனேகமாக எதிர்மறையானதாகவே உள்ளது.

அதனால்தான் பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதுபோல் பலருக்கு கஷ்டங்கள் உருவாகிறது.

அதனால் சிந்தனையில் செய்கையில் கவனத்தை செலுத்தி, சீர் செய்து நிம்மதியாக வாழ முயலுங்கள்.

இது வெறும் அறிவுரை அல்ல, எனது அனுபவம். சிந்தியுங்கள்.
நன்றி

Leave A Reply