சிந்தனைக் களம் – 21 – Bamini Rajeswaramudaliyar

Share

எனக்கு உரமாகி என்னை வலுப்படுத்தும் அனுபவத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

சூழலும் மனிதரும் எப்போதும் மாறலாம்.

நேற்றைய அனுபவத்தையும் சிந்தனையையும்,
என்னுடன் நான் சத்தமாக பேசிக் கொள்கிறேன்.

Self counselling or therapeutic approach கோபம் என்பதை பலயீனமாகவே காணும் எனக்கு, என் sensitivity யால், அடுத்தவரின் கோபம் என் உள்ளத்தை அதிரவைக்கும் போது என் உணர்வுகள் பயந்து போகிறது.

மற்ற மனிதரின் கோபத்தின் உக்கிரம் என் மனதை கூறுபோட்டு, எனக்குள் ஊடுறுவ முனையும்போது அது என்னுடைய உணர்வல்ல, அவர்கள் எறியும் எதிர்மறை குப்பையை நான் அள்ளவேண்டுயதில்லை என உணர்ந்து தள்ளி நின்ற போதும் உடல் அதிர்ந்து , உள்ளம் விம்மி களைத்துப் போகிறது.

மீண்டும் சுதாகரித்துப் கொண்டு கடமையில் கண்ணாக, சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சில நிமிடங்கள் எடுத்தாலும் , அனுபவ முதிர்ச்சியும், இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் என்ற எண்ணமும் துணிச்சலைத் தருகிறது.

உடல், மூளை சம்மந்தமான குறைபாடுகள் வேறு , தவறான பழக்கவழக்கங்கள் வேறு.

Special needs person என தவறுகளுக்கு இடம் கொடுத்து வளர்த்துவிட, தமது விருப்பத்திற்கு ஏற்ப மற்றவர்கள் நடக்காதபோது, கோவப்பட்டு பொருட்களை எறிந்து, சத்தம் போடுவது அழகற்றதாகவே உள்ளது.

ஆனாலும் அன்பு குறையாமல் கடமையை தொடர்கிறேன்.

என் அதிஷ்டம் என்னவென்றால் எனக்குக் கிடைத்த நல்ல திறமையுள்ள, புரிந்துணர்வுள்ள Manegar உம் colleagueதான்.

அப்படியானவர்கள் இருக்கும் போது வேலை கஷ்டமானதாக தோன்றுவதில்லை.

மனத்திருப்தி தரும் வேலை சந்தோஷமாக செய்கிறேன்.

வாழ்க்கை, பல தடைகளை, சிக்கல்களை, உணர்வுகளை பரிசோதனை செய்யும் சூழலை எமக்கு முன்பு அள்ளி எறிந்து கொண்டே செல்லும்.

அவற்றை தகர்த்து எறிந்து நடப்பதையே எமது பந்தயமாக எடுத்து முன்னேற வேண்டும்.

எது நடந்தாலும் நன்மைக்கேதான் என்பது இங்கேதான் ஊஜிதமாகிறது.

அனுபவக்கல்வியை போன்ற உன்னதமான கல்வி வேறு எதுவுமில்லை.

PHD level க்கு கற்றுத் தருகிறது.

அதனால் அனுபவங்களுக்கு நன்றி கூறி அழகாகவே கற்போம்.

சிந்திக்கவும்.
நன்றி

சிந்தனைக் களம் – 22 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply