சிந்தனைக் களம் – 22 – Bamini Rajeswaramudaliyar

Share

தன்னைப்போல் பிறரையும் நேசி என்கிறது மதம்.

பலரால் அப்படி நடக்க முடிவதில்லை காரணம் அவர்களால் தன்னைத்தான்.

நேசிக்க முடியாதபோது எப்படி பிறரை நேசிக்க முடியும்.

சிந்திக்கவும்!
அன்புள்ளங்களே!
அன்பே இறைவன்,

மனிதாபிமானமே கொள்கை எனக் கொள்ளும் போது எம்மைப்பற்றிய உயர்ந்த உணர்வு உருவாகும். அதுவே சுயமரியாதையை உருவாக்கி நிம்மதிக்கான வாழ்க்கைக்கான பாதையை உருவாக்கி நல்ல சக்தியை எம்மிடம் கவர வைக்கும்.

அன்புள்ளங்களே!

ஆன்மிகம் என்பது வாழ்க்கை முறையே அன்றி மதம் அல்ல.

உண்மை, நேர்மை, அன்பு, கருணை போன்ற பற்பல மேன்மையான குணங்கள், செய்கைகள் உள்ள இடத்தில் இறைசக்தி/பிரபஞ்ச சக்தி கவரப்படும்.

அங்கேதான் அதிசயங்கள்(miracles) நிகழுகிறது.

நாம் தினமும் காலையில் கண்விழிப்பது முதல் அனைத்துமே அதிசயம்தான்.

தலையுடன் வருவது தலைப்பாகையுடன் போவதும் அதிசயம்தான்.

நோயாளியை பார்க்க வைத்தியசாலைக்கு போகும் போது மார்புவலி வந்து காப்பாற்றப்படுவதும் அதிசயம்தான்.

கஷ்டங்கள் வருவதெல்லாம் தண்டணைக்காக அல்ல, கண்ணூறும் அல்ல.

ஏதோ அவரை விழிப்புணர்வை பிரபஞ்சம் தர முயல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

( பொறாமை உள்ளவர்களின் பார்வை கண்ணூராக இருக்கலாம் உங்கள் மனம் பலயீனமாக இருக்கும் போது மட்டுமே அது கஷ்டத்தை தரும் )

-கருணையுள்ள மனம் உள்ளவர்களுக்கு நன்மைகள் தானே நிகழும்.
-ஆசைகளை குறைக்க கஷ்டங்கள் குறையும்.

-எதிர்பார்ப்பை குறைக்க ஏமாற்றங்கள் குறையும்.

-தன்நம்பிக்கையை வளர்க்க தோல்விகள் குறையும்.

-சுயமரியாதை, தன்மானம் வளர நட்புகள் உறவகள் மதிக்கவில்லை என்ற ஆதங்கம் இல்லாமல் போகும், நிம்மதி உருவாகும். (தன்னை தகுதி குறைவாக நினைப்பதனால்தான் அடுத்தவர் மதிக்கவில்லை என்ற ஆதங்கமும் வேதனையும் உருவாகிறது)

-முயற்சியும் ஊக்கமும் வெற்றிகளைத் தரும்.

-தேவை அறிந்து அடுத்தவருக்கு உதவுங்கள். ( ஆடம்பரத்திற்காக கடன் கேட்கும் போதெல்லாம் கொடுப்பதல்ல. முயற்சியற்றவர்களுக்கு உதவி சோம்பேறியாக்குவதுமல்ல, உங்கள் குடும்பத்தை முதன்மைப்படுத்தாமல் யாருக்கும் பினாமி/Benami கையப்பம் வைப்பதல்ல.
சரீர உதவிகளை அளவுடன்
செய்யலாம், அவர்களின் பின்னால் ஓடித்திரிவதல்ல.
சிந்தனை அவசியம்.)

முக்கியமாக உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள்.

அன்புள்ளங்களே!

மேற்குறிப்பிட்டவற்றை தினசரி வாழ்க்கையில் நடைமுறையாக்க முயலுங்கள்.

உங்கள் வாழ்க்கை இனிமையானதாக மாறும்.

இடைஇடை விக்கல்போல் கஷ்டங்கள் வந்து போகலாம். ஆனால் அவை பெரிய பாதிப்பாக அமையாது.

சிந்தியுங்கள்!
நன்றி

சிந்தனைக் களம் – 23 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply