சிந்தனைக் களம் – 25 – Bamini Rajeswaramudaliyar

Share

எமக்கும், எமது முற்சிக்கும் வெற்றிக்கும் இடையில் தடையாய் இருப்பது வெறும் அச்சம்தான்.

எமது மூளை ஒரு பிரபஞ்சத்தை போன்றது. அதனை செயல்படுத்தும் சக்தி( willpower) எம்மிடம் மிகமிக அதிகமாகவே உள்ளது.

எமது அச்சமும், எமது சக்தியை நாம் குறைத்து கணிப்பிடுவதும் ( undermine ourselves) அல்லது அடுத்தவர் எம்மை குறைவாக கணிப்பிட்டு பேசும் கதைகளை நம்புவதும்தான் எமக்கு முழுமையான பயனை அடைய விடாமல் தடுக்கிறது.

உங்களை யார் எனக் கேட்டால் என்ன பதிலைக் கூறுவீர்கள்.

யாரின் மகள்/மகன்.
யாரின் மனைவி/ கணவர்
யார் உங்களுடைய பிள்ளைகள்.
தொழில் கல்வி இப்படி பட்டியல் நீளும்.
இவைகளை அகற்றிவிட்டால்
நீங்கள் யார்?
உங்கள் விரும்பு வெறுப்புகள் என்ன?
உங்கள் கனவுகள் என்ன எனக் கூறமுடியுமா?

உங்களை நீங்கள் அறிய, அச்சங்களை கடந்து சாதிக்க உங்களை நீங்கள் அறிய முயலுங்கள்.

உணர்வுச் சுதந்திரத்தை ( emotional freedom) உணர்வீர்கள்.

அதுவே சாதிப்பதற்கான கதவை வாசலை திறந்துவிடும்.

சிந்திக்கவும்.
நன்றி

சிந்தனைக் களம் – 26 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply