சிந்தனைக் களம் – 33 – Bamini Rajeswaramudaliyar

Share

பிரச்சனைகளை தவிர்க்க-

1-அடுத்தவர் விடையத்தில் தலையிடாதீர்கள். நட்பு, உறவு பிள்ளைகள் உட்பட அவர்கள் வாழ இடம் விட்டு நில்லுங்கள்.

திருமணமான பிள்ளைகளை அவர்கள் போக்கில் வாழ விடுங்கள். தேவைப்படும் போது அவர்கள் விரும்பினால் மட்டும் சிறிதளவு வழிநடத்தலாம்.

2-யாருக்கும் கேட்காமல் அறிவுரைகளை அள்ளிக் கொட்டாதீர்கள். காதுகளை பொத்திக் கொள்வார்கள். பயனில்லை.

3-அவசியமற்று ஓடிஓடி உதவ முனையாதீர்கள். உங்களுக்கு அதே உதவி மறுபடியும் கிடைக்காத போது குறை பேசும் சந்தர்ப்பம் உருவாகும். குணம் கெடும். கவனம். சிந்திக்கவும்.

4-அன்புடன் பழகிக் கொண்டு குறைகளை பேசாதீர்கள். ஏன் அப்படியான மனநிலை உருவாகிறது என உங்கள் மனநிலையை ஆராய்ந்து, உங்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

5-உங்களை நீங்களே குறைத்தும் பேசாதீர்கள். அதுவே அவர்கள் உங்களை தாக்கும் ஆயுதமாகிவிடும்.

6-உங்கள் மீது நம்பிக்கையும் மரியாதையும் அற்ற மனிதர்களுடன் பழகாதீர்கள். நீங்கள் பேசுபவற்றை அந்த மனநிலையுடன் கேட்டு தவறாக புரிந்து கொள்வார்கள்.

நான் அப்படி நினைத்துப் பேசவில்லை என அழுவது அதனால்தான்.

7-உங்களுக்கு புரியாத விடையங்களை காது கொடுத்துக் கேழுங்கள், விமர்சனம் கூறப் போகாதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் அவர்களின் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள்.

8-குறை பேசும்/ பிரச்சனையை விரும்பும் மனிதர்களுடன் சேராதீர்கள். அவர்களது நாடகங்கள் உங்கள் வாழ்க்கையாகி விடும். அந்தப் பிரச்சனைகளில் உங்களுக்கும் முக்கியமான பங்கு/பாகம் வந்துவிடும்.

9-பழகுபவர்களின் பேச்சும் செய்கையும் ஒன்றாக இருக்கிறதா என்பதை பாருங்கள். அவர்களின் செய்கைகள் அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறும். கவனியுங்கள்.

அன்புள்ளங்களே!

இயற்கை அனர்த்தங்களை தவிர்த்து மற்றைய பிரச்சனைகளை நாமே உருவாக்குகிறோம்.

சிந்தனையும் உணர்வும் ஒன்று சேரும் போது நினைப்பவை நடக்கிறது.

நேர்மறை உணர்வை விட எதிர்மறை உணர்வையே intense ஆக பலரும் பேசுவார்கள். அதுவே பல கஷ்டங்களை எமகக்கு வர பாதை அமைக்கிறது.

இந்த உண்மைகளை உணர்ந்து கடைப்பிடிப்பதனால்தான் நிம்மதியாக வாழ்கிறேன்.

சிந்திக்கவும்.
நன்றி

சிந்தனைக் களம் – 34 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply