தோல் அணுக்களை மாற்றி….!

Share

மூளை மற்றும் முதுகுத்தண்டுக்குள் செல்லும் நரம்புகளை மைலின் என்ற கொழுப்பு உறை பாதுகாப்பாக மூடியுள்ளது.
தண்டுவட மரப்பு நோய் அல்லது மல்ட்டிப்ள் ஸ்க்லெரோசிஸ் என்ற நோய் இந்த உறையை சேதப்படுத்துகிறது. இதையடுத்து, இந்த நரம்புகள் சமிக்ஞைகளை அனுப்ப முடியாமல் சிரமப்பட்டன. எனவே, பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த சேதத்தை சரிசெய்ய இதுவரை வழியில்லாமல் இருந்தது.
ஆனால், இப்போது நோயாளியின் சொந்த தோலைக் கொண்டு இந்த சேதத்தை சரிசெய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.
மனித தோல் அணுக்களை எடுத்து, குருத்தணுக்களாக மாற்றுகின்றனர். குருத்தணு என்பது மேம்பாடு அடையாத, வகைப்பாட்டிற்கு உட்படாத ஆனால், புதிய உயிரணுக்களை உருவாக்குவதற்கு வகைசெய்யும் அணுக்களாகும்.
பின்னர் இந்த குருத்தணுக்களை மைலின் உற்பத்தி செய்யத்தக்க அணுக்களாக மாற்றுகின்றனர்.
காலப்போக்கில் சேதமடைந்த நரம்புகளை இந்த ஆராய்ச்சி மூலம் சீராக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply