ஜூன் 2ம் வாரத்தில்… சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் ஸ்புட்னிக்- வி தடுப்பூசி!

Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்வதே நோயில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கான ஒரே வழி என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதனால், கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதனிடையே, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த தடுப்பூசி எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், 35 நகரங்களில் மட்டுமே இந்த தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அந்த மருந்தை 18 டிகிரி செல்ஸியசில் வைத்து பாதுகாக்க வேண்டி இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த மருந்தை செலுத்த முடியாது என்றும் இனி வரும் நாட்களில் இந்த நிலைமை மாறலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஹைதராபாத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது சென்னையிலும் ஜூன் 2வது வாரம் முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

Leave A Reply