உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் புதுச்சேரி தமிழர்!

Share

அமெரிக்காவின் ‘ஸ்டாண்டபோர்ட் பல்கலைக்கழகமும்’ (Stanford University) ‘எல்ஸ்வயர்’ (Elsevier) என்னும் விஞ்ஞான ஆய்வு இதழ்களின் மேலாண்மை குழுமமும் இணைந்து உலகளாவிய விஞ்ஞானிகளை, அவர்களுடைய விஞ்ஞான பங்களிப்பு அடிப்படையில் தரவரிசைப்படுத்தியத்தி இருக்கிறது. இந்த தரவரிசையில் தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாக்டர் ஆரோக்கியராஜ் உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகளில் ஒருவராக தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருடன் இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரான டாக்டர் ஆரோக்கியராஜ் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். அவருடைய ஆய்வுக் கட்டுரைகளை ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் அவரை தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளில் ஒருவராக தேர்வு செய்துள்ளது. ஆரோக்கியராஜ் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதுடன், பல்வேறு தளங்களிலும் சிறப்பான பங்களிப்பை செய்துவருகிறார்.

கொரியா தமிழ் உறவுகள் குறித்தும் இவர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, சமூக அக்கறையுடன் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். இவர் சென்னை லயோலா கல்லூரியில் MSc., Biotechnology , சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் லைஃப் சயின்ஸில் பிஎச்டியும் பெற்றுள்ளார்.

இந்த தேர்வு குறித்து அவரிடம் கேட்டபோது, தனது மாணவர்களுக்கும், தனது ஆய்வுகளில் துணையாக இருந்த சக ஆசிரியர்களுக்கும், தனது பெற்றோர் சிரோமணி மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கும், தனது ஆசிரியர்கள் டாக்டர் அல்போன்ஸ் மாணிக்கம், டாக்டர் பேரின்ம்பம், டாக்டர் அகஸ்டின், டாக்டர்.வின்சென்ட், பேராசிரியர் கியோங் ஹூன் கிம், பேராசிரியர் ஹாக் டாங் ஷின்ஆகியோருக்கும் தென்கொரியாவிந் செஜோங் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

(I thank my students, co authors in research, parents (Sironmani & Selvaraj), teachers Dr.Alphonse Manickam, Dr.Perinbam, Dr.Agastian, Dr.Vincent, Prof.Kyoong Hoon Kim, Prof.Hak dong Shin and Sejong University, South Korea for their support)

தங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இருவர் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்ததை செஜோங் பல்கலைக்கழகம் பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த இரண்டு விஞ்ஞானிகளையும் பற்றி கொரிய செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Leave A Reply