ஜெயக்குமாரை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

Share

திங்கள்கிழமை காலையில் கொடநாடு கொலை கொள்ளை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிப்பதை கண்டித்து முன்னாள் மெயின்ரோடு அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பதற்றப் பேட்டி அளித்தார்…

அதைக் கேட்டபோது அவர் அதீத பதற்றத்தில் இருப்பதாக பகிரங்கமாக தெரிந்தது. செய்தியாளர்கள் யாரையும் கேள்வி கேட்கவே விடவில்லை. அரசியல் சட்டம் குறித்து, நீதிமன்றம் குறித்து, சட்டம் குறித்து, பேரவை வரம்பு குறித்தெல்லாம் வரம்பில்லாமல் நரம்பில்லாத நாக்கால் உளறிக் கொண்டிருந்தார்.

அதற்கு நானே பதில் சொல்லனும் என்ற வெறி எனக்குள் உருவானது. ஆனால், எனது விருப்பத்தை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அப்படியே நிறைவேற்றினார். தலைவர் கலைஞரை அணுஅணுவாக ரசித்து, அவரை உள்ளுக்குள் வாங்கியவர் ஆச்சே…

சரியான பாய்ண்ட்டை பிடித்து, ஜெயக்குமாரின் மொத்த உளறல் பேட்டியையும் கிண்டலடித்துவிட்டார்.

சட்டம்பற்றி பேச முதல்வருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்க நீ எவ்வளவு தற்குறியாக இருக்க வேண்டும் என்று நான் சொல்ல நினைத்தேன்.

அதையே வேறு நாகரிகமான வார்த்தைகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டார். ஆம், சட்டங்களை இயற்றும் பேரவைத் தலைவராக இருந்த நீங்கள், சட்டத்துறை அமைச்சராக இருந்த நீங்கள், தமிழகத்தின¢ சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் முதல்வர் தளபதிக்கு சட்டம் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கலாமா? என்றார்.

எனக்கு முழு திருப்தியாக இருந்தது. நன்றி அமைச்சர் அவர்களே…

Leave A Reply