தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

Share

4. மலையகப்பெண்கள் தொழில் தேடி வெளியேறுதல்

இவ் பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்டப் பெண்கள்  தொழில் தேடித் தொலைவிலுள்ள நகரங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் சங்கங்கள் கம்பனிகளள் இடையில் கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும் இவ் ஒப்பந்தயத்தில் எத்தனை நாள் வேலை எப்படி சம்பளம் எத்தனை நாள் விடுமுறை புதிதாக தேயிலை பறிக்க ஆட்களை எவ்வாறு சேர்ப்பது சம்பள படிகள் இணைப்பது என 21 அம்சங்கள் முடிவு செய்யப்படும்.

ஆனால் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் நடக்கவில்லை இதனால் மலையகக் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களின் தினக்கூலி 100/- என்ற வாசகமே வாக்குச் சேகரிப்பு காலத்தில் தாரகமந்திரமாக வைத்து அரசியல் செய்கிறார்கள்.அரசாங்கத்தின் தினக்கூலியாக 1000/- உயர்த்தவும்  அரசு ஆணை (Gazzatte) வெளியிட்டாலும் தோட்டக்கம்பனிகள் இவ் உத்தரவுக்குச் செவி சாய்ப்பதாக இல்லை. அத்தோடு அரசினுடைய ஒப்பந்தத்துக்கு இணங்கி வராததால் அவ் அரசின் ஒப்பந்தம் எதனையும் நடைமுறைப்படுத்த இயலவில்லை. இது மேலும் தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை மேலும் மோசமாக்கிக் கொண்டு செல்கிறது.

கட்டுரையாளர் எஸ்தர்

இவ் இலங்கையின் பெரும் பொருளாதார பேரிடரை மலையகம் இப்போது கணிசமான பெண்களின் மத்திய கிழக்குநாடுகளுக்கு பயணிக்கிறார்கள். ஆரம்பத்தில் தேயிலைத்தோட்ட வேலையை விடுத்து ஆடைத்தொழில் சாலைகளில் ஈடுபட்டுள்ளன இப்போது ஆடைத்தொழிற்சாலையின் வருமானம் போதாதக் காரணத்தினால் மலையக யுவதிகளும் பெண்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியேறுகின்றனர். குழந்தைகள் கணவர் பெற்றோர் உற்றாரை விட்டு வறுமையின் கைவிலங்கை உடைக்கும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கிறார்கள். அங்கே செல்லும் பெண்கள் எல்லோரும் நல்ல எஜமானர்களுடன் நல்ல் பணக்காரர்களின் வீட்டில் வேலை செய்து உடனே இவர்கள் பணக்காரர் ஆவதில்லை. அங்கேயும் அவர்கள் மிகவும் துன்ப நிலையில் அகப்படுகிறார்கள் சிலபெண்கள் உயிரை. துச்சமென நினைத்து வீட்டை விட்டு தன் சொந்த நாட்டுக்கு பிணப்பெட்டியில் வருகிறார்கள். பொருளாதார நிலையை மாற்றத்தான் புறப்படும் இவர்கள் திரும்பி பிணப்பெட்டிகளால் திரும்பி வருகிறார்கள்.

இவ்விடத்தில் ஒரு விடயத்தை முன்வைக்க விரும்புகிறேன்.மிகவும் மலினத்தனமான வேலையைத்தான் இலங்கை அரசாங்கமும் செல்கிறது. வறுமை வறுமை என்ற ஒரே ஒரு காரணத்தினால் மாத்திரமே மலையகப்பெண்கள் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து ஆண்களும் பெண்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.  ஒப்பீட்டளவில் தமிழ் நாட்டிலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருவது குறைவு. ஆண்கள் வருகிறார்கள் காரணம் தமிழ்நாட்டில் உணவினைப் பெற்றுக் கொள்ளும்  உன்னத நிலை அங்குண்டூ தமிழ்நாட்டில் தவிர ஏனைய மாநிலம் கேரளப் பெண்கள் அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகிறார்கள். விடுதிகளிலும் ஹோட்டல்களிலும் அரபிக்காரருடைய வீடுகளிலும் கடைத் தெருக்களிலும் கேரளப்பெண்கள் வட மாநிலப் பெண்கள் வேலை செய்வதை நானறிவேன். ஆயினும் தமிழ் நாட்டுப் பெண்கள் ஒப்பீட்டளவில் குறைவு.

இலங்கையில் சுதந்திரம் பெற்றதிலிருந்து 40 வருடங்களாக மலையகப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால் வெளிநாட்டு வருவாயில் லாபமடைவது அரசியல்வாதியும் இதனை அண்டிப் பிழைப்பவர்களுமே மத்தியக்கிழக்கு தேடிப்பயணிக்கும் அவர்களைத்  தடுத்து உள்ளூரிலே தன்னிறைவு பெறும் எந்தவாத பூரண பொருளாதார நடப்புத் திட்டங்கள் பெண்கள் மத்தியில் அவர்களால் செய்யமுடியவில்லை. மத்திய கிழக்கில் எம் பெண்களை அடிமைகளாக அரேபியர்களின் வீடுகளில் ஒட்டகம் வளர்க்கும் பெண்களாக இவர்களை அனுப்புகின்றார்கள். காரணம் வெளிநாட்டுப்பணம் உள்நாட்டுக்கு வரவேண்டும் அதில் தங்கள் வசதியாய் வாழுவதேயாகும். கிட்டத்தட்ட இலங்கை அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இவ் இலங்கை மக்களைக் மறைமுகமாகக்  கூட்டிக் கொடுத்தே உழைக்கிறார்கள்.

இப்போதும் என்ன சொல்கிறார்கள் எமக்கு அந்திய செலாவணி தேவை ஆகவே வெளிநாட்டுக்கு போய் உழைத்து வாருங்கள் எனப் பகிரங்கமாக அழைப்பும் வேண்டுகோளும் விடுகிறார்கள் அங்கே இடம்பெறும் சட்டக்கொலைகள் (சவூதி அரேபியாவின் தலை வெட்டுதல் கைகால் துண்டித்தல்) வன்முறைகள் பாலியல் கொடுமைகள் முதலான அத்தனை துன்பத்தினையும் கண்டும் காணாது இலங்கை இருக்கின்றது. பாதிக்கப்பட்டவரின் பக்கம் ஒருபோதும் முழுதாக இலங்கை அரசு நின்ற வரலாறு இல்லை. ஆகவே இவ் துன்பகரமான நிலையில் அகப்பட்ட பெண்கள், உழைக்கும் மலையகப் பெண்கள் மத்திய கிழக்குக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் வேலைக்குச் சென்று இங்கே வாழும் அவளின் பிள்ளை பாடசாலைக் கல்வியை இடையில் கைவிடுகிறார்கள். கணவன் அவர்கள் அனுப்பும் பணத்தை ஊதாரியாக செலவழித்துவிட்டு கடைசியில் இவ்வளவு காலமாக உழைத்தப் பெண்கள் நாடு திரும்பும் போது மீண்டும் வறுமை நிலைக்கு ஆளாகிறார்கள்.

தேயிலை, றப்பர் என்பவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி என்பவற்றிற்கூடாகத் தோட்டத்தொழிலாளர் இந்நாட்டின் செல்வவளத்திற்கு கணிசமாக பங்களித்து வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்களது கடும்உழைப்பே நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தினர் அடைந்துள்ள பௌதீக வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் ஆதாரமாகவிருந்தது. இன்றுங்கூட, அவர்களது கடுமையான உழைப்பே நாட்டுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு செலாவணியில் கணிசமான பகுதியை ஈட்டிக்கொடுக்கின்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், அண்மைக்காலம்வரை அரசாங்க வரிவருமானத்திற்குங்கூட அவர்களது உழைப்பு பெரும் பங்களித்து வந்தது. ஆனால் இதற்கு மாறாக, பொருளாதார அடிப்படையிலும், கல்வி, சுகாதாரம், சமூகஏற்புடமை, சமூக-கலாசார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் என்பவற்றிலும் அவர்களது நிலை துரதிர்ஷ்டவசமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. சுகாதார – இருப்பிடவசதிகள், கல்வி, சிசு மரணவிகிதம், போஷாக்கு போன்ற பல்வேறு சமூகஅபிவிருத்திக் குறிகாட்டிகளினடிப்படையில் தோட்டத்தொழிலாளர் இன்றும் மோசமான நிலையிலேயே உள்ளனர்.

இத்தகைய துன்பகரமான நாட்டின்நிலைமையில் மக்களின் மனங்கள் மிக துயரத்தோட இருக்கிறது. மலையக மக்கள் இந்த நிலையை கடந்து வர நீண்டநாட்களாகும் என்கிறது ஆய்வுகள் மலையக மக்களின் இந்த பொருளாதாரச் சூழலில் மலையப்பெண்கள் இன்னும் என்ன செய்வது என விழிபிதுங்கி நிற்கிறார்கள் தங்களால் தம் பிள்ளைகளுக்கு மூன்று வேளை முழுமையான உணவை தந்துவிட முடியாத அவலநிலை அவர்தம் சூழலில் உள்ளது அரசாங்கத்திடம் கோதுமை மாவுக்கும் இன்னும் பிறதேவைக்கு அவர்கள் மானியங்களை கோரிக்கையாக வைத்துள்ளார்கள். அரசுமே இம்முறை அவ் மக்களின் வாழ்வியலில் கவனம் செலுத்துவதாக சொல்லியுள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் காலம் மலையக மக்களுக்கு கை கொடுக்குமா இல்லை கை விடுமா என்று.

தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

Leave A Reply