மாமன்னன் படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு – அமைச்சராகிறார் உதயநிதி?

Share

நெஞ்சுக்குநீதி படத்தை வெளியிட்டபிறகு, மாமன்னன் படம்தான் எனது கடைசிப் படமாக இருக்கும். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் தவிர்க்கிறேன். இதற்கு காரணம் அரசியலில் நான் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு படத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தது 45 நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது. அந்த நாட்களில் நான் அரசியலில் ஈடுபடமுடியாமல் போகிறது. எனது தொகுதியை கவனிக்க முடியாமல் போகிறது. அரசியலில் சினிமாவைக் காட்டிலும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு நிறைய வேலைகள் காத்திருக்கின்றன.

சினிமாவில் இருப்பது எனக்கு அரசியலாய் சில சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அவர்களாய் என்னிடம் படத்தை வெளியிடும்படி சொல்கிறார்கள்.

ஆனால், நானே வற்புறுத்தி நிர்பந்தப்படுத்தி படங்களை வாங்கி வெளியிடுவதாக கூறுகிறார்கள். என்னை ஏதாவது சொல்லனும் என்பதற்காகவே சொல்கிறார்கள் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Leave A Reply