அதிகாரிகளின் பிடியிலிருந்து விடுபடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்? – உதயமுகம் வாரஇதழ் தலையங்கம்

Share

“அவருடனான எண்ணற்ற உரையாடல்களை அவரது முகத்தைப் பார்த்த வண்ணம் அசை போட்டுக் கொண்டிருந்தேன். எத்தனை செய்திகள், எவ்வளவு விஷயங்கள், என்னென்ன அறிவுரைகள், எத்தகைய வழிகாட்டல்கள்… அவரின் அன்பு, கோபம், கனிவு என எல்லா உணர்ச்சிகளும் கலந்து வெளிப்பட்ட அந்த கணங்கள் என் கண் முன்னால் நிழலாடிக் கொண்டிருந்தன”

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் சிலை நிறுவப்பட்ட அன்று தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இதைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

கலைஞரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் தங்களுடைய யோசனைகளையோ, திட்டங்களையோ அவரை சந்தித்து நேரடியாக கூற முடியும். அவர்களுடைய யோசனைகளையோ, திட்டங்களையோ பரிசீலித்து நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார் கலைஞர்.

அமைச்சர்கள் மட்டுமல்ல, மாவட்டச் செயலாளர் களும் முதலமைச்சரை எளிதில் சந்தித்து தனது மாவட்டத்துக்கான தேவைகள் குறித்து ஆலோசனை நடத்த முடியும்.

ஆனால், இன்றைய சூழலில் முதலமைச்சரைச் சந்தித்து தங்கள் துறைசார்ந்த புதிய யோசனைகளையோ, திட்டங்களையோ ஆலோசிக்க முடியாமல் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் திணறுகிறார்கள்.

எதுவானாலும் அதிகாரிகளைச் சந்தித்து பேசும்படி முதல்வர் உத்தரவு என்கிறார்கள். அதாவது, அதிகாரியை சூப்பர் முதல்வராக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

முதல்வரைச் சந்திக்க விரும்பினால், அதை முடிவு செய்யும் இடத்தில் ஒரு உதவியாளர்தான் இருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்குகிறது.
ஒருபக்கம், தொண்டர்களின் விருப்பத்தை, தேவையை அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் நிறைவேற்ற வேண்டும் என்கிறார் முதலமைச்சர்.

ஆனால், தொகுப்பூதியத்தில் அதிமுகவினர் தனது கட்சிக்காரர்களை நுழைத்த வேலைவாய்ப்புகளைக்கூட டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர்.

அனைத்துத் துறைகளிலும் தொகுப்பூதிய பணியி டங்களை ஆயிரக்கணக்கில் உருவாக்கி, அதை கட்சிக் குடும்பங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவெடுப்பதே சரியாக இருக்கும். •

Leave A Reply