பாஞ்சாலி மானத்தைக் காத்தது கிருஷ்ணரா? துர்வாச முனிவரா? – Athanur chozhan

Share

மகாபாரதக் கதையில் பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் மனைவியாக வாழ்ந்த திரவுபதி அல்லது பாஞ்சாலி எனப்படும் பெண்ணை துரியோதனன் சபையில் மானபங்கப் படுத்தும் போது, கிருஷ்ணர் காப்பாற்றியதாக கூறுவார்கள். ஆனால், அவளைக் காப்பாற்றியது துர்வாச முனிவர் என்ற விவரம் கிடைத்திருக்கிறது.

இந்து புராணங்களில் இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. இதற்கு காரணம் ஒரு புராணத்திலிருந்து இன்னொரு புராணத்தை திருத்தி அமைத்து உருவாக்குவதுதான் என்கிறார்கள்.

ஐந்து ஆண்களுக்கு மனைவியான திரவுபதியை பாண்வர்கள் சூதாட்டத்தில் தோற்றுவிடுவார்கள். அதைத்தொடர்ந்து துரியோதனனுக்கு அவள் சொந்தமாகிவிடுவாள். அவளை மானபங்கப்படுத்தும் போது, கிருஷ்ணர் அவளுக்கு உடைகொடுத்து மானத்தை காப்பாற்றியதாக மகாபாரதத்தில் கூறப்படும்.

கிருஷ்ணர் ஒருமுறை தனது விரலை வெட்டிக் கொண்டபோது, பாஞ்சாலி தனது துணியை கிழித்து அவருக்கு கட்டுப்போட்டதாகவும், அதன் காரணமாகவே கிருஷ்ணர் அவளுக்கு உடைகொடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுவது உண்டு.

ஆனால், சிவபுராணத்தில் துரியோதனன் சபையில் திரவுபதையை துர்வாச முனிவர் கொடுத்த வரம்தான் காப்பாற்றியதாக கூறப்பட்டிருக்கிறது.

சிவபுராணம் 19ஆவது அத்தியாயமான சாட்டருட்ரா ஷம்ஹிதாவில் இந்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. துர்வாச முனிவர் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய கோவணம் நீரோடு போய்விடுகிறது. இதையடுத்து அவர் வெளியே வர வெட்கப்பட்டு நீருக்குள்ளேயே இருக்கிறார்.

சற்றுத் தொலைவில் திரவுபதையும் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவள் துர்வாசரின் நிலையறிந்து, தனது சேலையின் ஒரு பகுதியைக் கிழித்துக் கொடுத்து முனிவரின் மானத்தைக் காப்பாற்றுகிறாள். அதற்கு பதிலாக, திரவுபதைக்கு பல அடுக்கு மேலாடையை வரமாக கொடுத்தார் துர்வாசர் என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி ஒரு வரம் கொடுக்கும் ஆற்றல் பெற்ற துர்வாசர், தனக்குரிய கோவணத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியவில்லையா என்று கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டால், நீங்கள் ஆண்ட்டி ஹிண்டு ஆகிவிடுவீர்கள்.

Leave A Reply