வாழைப்பழம் ஒரு
சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக
இருந்தாலும், அதன் மருத்துவ
குணங்கள் அதிகமாகவே இருகின்றன.
இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ்
மற்றும் சுக்ரோஸ் போன்ற
சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி
உள்ளதால் அற்புதமான உணவாகும்.
1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக
வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும்
புரதம் மனஉளைச்சலைக் குறைத்து
ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால்
சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த
சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது
வாழைப்பழம்.
3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச்
சத்து குறைவாக இருப்பதால்
இது இரத்த அழுத்தத்தைச்
சீர்செய்யவும், மூளை விழிப்புடன்
இருந்து சிந்தனைத் திறனை
மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள்
நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில்
விடுபடவும் உதவுகிறது.
4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை
உருவாக்கும் அமிலத்தைச் சமன்
செய்து நிவாரணம் அளிக்கிறது.
5. வைட்டமின் B அதிகம் இருப்பதால்
நரம்பு மண்டலத்தைச் சீராக
வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக
சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர்.
இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி
போல உட்கொண்டால் உடல்
எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண்
ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
இவை மட்டுமல்லாமல் வாழைப்பழத்
தோல், உடலில் தேய்த்துக்
கொண்டால் கொசுக்களை விரட்டமுடியும் என்றும் சருமத்தில்
உண்டாகும் மருக்களிலிருந்து விடுதலை
பெறமுடியும் என்றும், கால்
புதையணி (Shoe) பளபளப்பாக்கப் பயன்படுத்தலாம்
வாழைப்பழம்
Share