வேலையும் உடல்நலமும்

Share

உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப்படாததாக இருந்தால், நீங்கள் 6 முதல் 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிக்கட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் வரிசை கட்டி வரும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை உணர்வது அரிதே,

இந்தியர்களில் 43 சதவீதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் இயக்குநர் பி.கே. நாக். நாள் முழுவதும் உட்கார்ந்து செய்யும் வேலை, புகைப் பழக்கத்துக்கு இணையாக மோசமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அது, `டைப் 2′ சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லலாம். ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஓடியாடி வேலை செய்யும் மற்றவர்களை விட அதிக எடை போடும் வாய்ப்பு இரண்டு மடங்காம். மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பை உடற்பயிற்சி கூட போக்காது என்கிறார்கள்.

இருக்கைப் பணி’ புரிபவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும், சோம்பல் முறிப்பது போன்ற எளிய பயிற்சிகள் கூட நன்மை பயக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்..!

Leave A Reply