அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! – டி.யூ.ஜெ. வலியுறுத்தல்.

Share

தி.மு.க. தலைமை நிலையமான, அறிவாலயத்தில், கையூட்டு,பெற்று கொண்டு, கேள்வி கேட்பதாக, பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை, அவதூறாக, கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டி.யூ.ஜெ.
வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, சங்கதின் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 26- ந் தேதி,பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களைத் துவக்கி
வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்திற்கு, தேவையான, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு பதிலளிக்க உள்ளதாகக் கூறி, நேற்று (27.5.22) மாலை சென்னையில், பா.ஜ.க தலைவரான, அண்ணாமலை கட்சியின் தலைமை அலுவலகமான, கமலாலயத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது, அதில் பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவர் பிரதமர் மோடி வருகையின் போது, விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, காவல்துறை அனுமதியுடன்தான் பேனர் வைத்தோம். விதிமுறை மீறி வைக்கப்பட்டதற்கான ஆதாரம் இருக்கா? என்று அண்ணாமலை கேட்டார்.

அதற்கு ஆதாரம் உள்ளது என்று, ஊடகவியலாளர் கூறியவுடன்.
அதை காது கொடுத்தும் கேளாமல், ஆத்திரத்துடன், வன்மமாக “அண்ணன் உங்களுக்கு இன்று 200 ரூபாய் வந்து வந்துவிடும். இல்லை ரூ 400 கொடுத்து விடலாம், இல்லை 600, 1000 கொடுத்து விடலாம், உங்களின் இந்த கேள்விக்கு அறிவாலயத்தில் ரூ1500 உங்களுக்கு கொடுத்து விடுவார்கள்” என, கொச்சையாகவும் ஏலம் விடும், ஒருகமிஷன் ஏஜெண்டு போலவும், நிதானம் இழந்து பேசியுள்ளார்.

பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள், அறிவாலயத்தில் கையூட்டு, பெற்றுக்கொண்டு, செயல்படுவதாக, அவதூறாகவும் மிக கேவலமாகவும் கூறியுள்ளார்.

அவரின் இந்த அவதூறு பேச்சை, டி.யூ.ஜெ. வன்மையாக கண்டிப்பதுடன்,
இந்த அவதூறு பேச்சுக்கு, அவர் உடனடியாக, ஊடக வியலாளர்களிடம்
பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என டி.யூ.ஜெ. வலியுறுத்துகிறது.

தொடர்ந்து அவர் ஊடகவியலார்களை இது போல் அவதூறு செய்துவந்தவர். இதன் உச்சகட்டமாக, நாவடக்கம் இல்லாமல், மத்தியில் ஆளும் கட்சியின், தமிழகதலைவர் என்கிற பொறுப்புக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாமல், அவர்பேசியுள்ளார்.

இந்த அவதூறு பேச்சு, ஜனநாயகத்தின், நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களின் செயல்படும் உரிமையை அவமதிக்கும் செயலாகும்.

பத்திரிகையாளர்களை சீண்டிப்பார்க்கும் போக்குகளை கைவிட்டு, தனது
அவதூறு பேச்சுக்கு, மன்னிப்பு கோர வேண்டும் என டி.யூ.ஜெ. மீண்டும் வலியுறுத்துகிறது.

அவர் மன்னிப்புக் கோராவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புகள், சங்கங்களிடம் கலந்துபேசி உரிய நடவடிக்களை மேற்கொள்வோம் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு டி.யூ.ஜெ.யின்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply