கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்

Share

கொரோனா ஓழிப்பு நடவடிக்கைக்கு ஓசூர் பகுதியைச் சேர்ந்த அண்ணன்- தங்கை தங்களது சிறுசேமிப்பு தொகையை மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கினர். கொரோனா நிவாரண நிதிக்கு மக்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டுமென தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை ஏற்று, ஓசூர் பகுதியில் உள்ள தனியார்  பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் ஓசூர் நேதாஜி சாலையைச் சேர்ந்த வினய் என்பவரின் மோஹீத்(9) மற்றும் அவரது தங்கையான எல்கேஜி படிக்கும் சாத்விகா(3) ஆகிய சிறுவர்கள், தாங்கள் வீட்டில் பிக்கி பேங்க்(உண்டியல்) மூலம் சேர்த்து வைத்திருந்த ரூ.3,693 பணத்தை நேரடியாக மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு ஆணையாளர்  பாலசுப்பிரமணியிம் மற்றும் பணியாளர்கள் பாராாட்டு தெரிவித்தனர்.

Leave A Reply