கோகோ கோலா பாட்டிலை தூக்கி வீசிய ரொனால்டோ

Share

யூரோ-2020 தொடருக்கான 16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்றைய லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஹங்கேரி அணியை எதிர்கொள்கிறது.

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ, இந்த போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது அவர் டேபிளின் மீது இரண்டு கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிந்தை பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அவற்றை தூக்கி தூர வைத்துவிட்டு, தூரத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, ’அகுவா’ என்று சொல்லிவிட்டு தன் எதிரே வைத்துக்கொண்டார்.

அகுவா என்றால் போர்ச்சுகீசிய வார்த்தையில் தண்ணீர் என்று அர்த்தம். குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிங்கள் என்று ரொனால்டோ சொல்வதாகத்தான் அந்த செயல் இருந்தது.

இதனால் ரோனால்டோவுக்கு அணி தலைமை எதிர்ப்பு தெரிவிக்குமோ, அவரின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பரபரப்பு ஏற்பட்டது.

யூரோ-2020 தொடருக்கான ஸ்பான்ஷர்களில் கோகோ கோலா முக்கியமானது என்பதால்தான் அந்த பரபரப்பும் பதற்றமும் நிலைவியது.

இதற்கு ரொனால்டோ, ‘’என்னை யாரும் கட்டம் கட்ட முடியாது. என்ன நடந்தாலும் சரி’’ என்று அசால்ட்டாக சொல்லிவிட்டார்.

Leave A Reply