தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Share

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.” என்ற அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கியுள்ளது.

தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. இந்த வேளையில், அரசியல் கட்சி பிரமுகருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

Leave A Reply