பணம் கொடுக்காததால் காருக்கு தீ வைத்த நபர்!

Share

உத்திரப்பிரதேசம், நொய்டாவில் உள்ள சதர்பூர் கிராமத்தில் கட்டுமான ஒப்பந்ததாரர், கடந்த 2 ஆண்டுகளாக நிலுவைத் தொகையான ரூ.2.68 இலட்சத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து, பெட்ரோலை எடுத்து வந்த தொழிலாளி ஒருவர் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெர்சிடிஸ் கார் மீது ஊற்றி, தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இது குறித்து கட்டுமான ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இது குறித்து சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave A Reply