புயல், மழை பாதிப்பு- சென்னையில் மத்திய குழு ஆய்வு

Share

புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துவருகின்றனர்.

நிவர் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய அரசு, உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பியது.

7 அதிகாரிகள் இடம்பெற்று அந்த குழு, சென்னைக்கு வந்து 2 பிரிவுகளாக பிரிந்து தமிழகத்தில் புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

அதன்படி, வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை மற்றும் காசிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Leave A Reply