வீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி

Share

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு தரப்பினருடன் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று காணொலி காட்சி மூலம்  நட்சத்திர விளையாட்டு வீரர்களுடன் பேசினார்.

விஸ்வநாதன் ஆனந்த்,  பி.டி.உஷா,  கோபிசந்த், ஹிமா தாஸ், பஜ்ரங் புனியா, பி.வி.சிந்து, ரோகித் சர்மா, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், சித்தேஸ்வர் புஜாரா, மேரி கோம், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி என 40 விளையாட்டு வீராங்கனைகள், வீரர்களும் பிரதமர் பேசினார். அப்போது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான  சூழல் குறித்து பேசினார். மேலும்  ‘கொரோனா வைரஸ் நெருக்கடியை உணர்த்தும் வகையில் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து மெழுகு, எண்ணெய் சுடர்களை ஏற்றுங்கள்’  என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Leave A Reply