”வெண்டிலேட்டர் வேண்டாம்… இளையவர்களை காப்பாற்றுங்கள்” – தியாகம் செய்த மூதாட்டி மரணம்!

Share

பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி சூசன் ஹொய்லாயெர்ட்ஸ் (Suzanne Hoylaerts ) என்பவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மார்ச் 20ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனக்கு செயற்கை சுவாசம் தேவை இல்லை. வெண்டிலேட்டர்களை இளைய மக்களுக்காக பயன்படுத்துங்கள். நான் ஏற்கனவே நன்றாக வாழ்ந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

இரண்டு நாட்கள் செயற்கை சுவாசம் இல்லாமல் சமாளித்த அந்த மூதாட்டி 2 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் இந்த தியாக உள்ளத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் பலரையும் கவலை அடைய வைத்துள்ளது.

Leave A Reply