57வது வார்டு திமுக வேட்பாளர்க்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

Share

மதுரை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 57வார்டு திமுக வேட்பாளர்க்கு வார்டு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு

மதுரை மாவட்ட மாநகராட்சி தேர்தலில் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை மாநகராட்சி 57வார்டு தேர்தல் திமுக வேட்பாளர் இந்திராணிபொன்வசந்த் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நலத்திட்டங்களையும், எதிர்கால திட்டங்களையும் மக்களிடம் விளக்கமளித்தும், வார்டு மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபடுவேன் என்று உறுதிகூறி வார்டு மகளிர்கள் மத்தியில் அதிக செல்வாக்குடன் வலம் வருகிறார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 1ம்பகுதி செயலாளர் பொன் வசந்த், 57 வார்டு திமுக வட்ட செயலாளர் பா.தங்கம்,முன்னாள் மாமன்ற உறுப்பினர் அருண்குமார், மற்றும் கட்சியினர் வசந்தகுமார், ரவிசங்கர், மீசை.ரமேஷ் மகளிர் அணியைச் சார்ந்த கலையரசி,ஆஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply