ஆம்புலன்ஸ் வரத் தாமதம்: ஜேசிபி இயந்திரம் மூலம் மருத்துவமனையில் அனுமதி!

Share

மத்தியப்பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கிய ஒரு நபர், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், ஜேசிபி எந்திரம் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் சிக்கி காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டியை மருத்துமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், காயம் பட்டவரை மீட்ட உள்ளுர் பஞ்சாயத்து உறுப்பினர், தனது ஜேசிபி இயந்திரத்தில் ஏற்றிச்சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்.

Leave A Reply