2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி! வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

Share

தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார் விவசாய அணி மாநில செயலாளர் சோழவந்தான் எம் வி எம் குழுமத் தலைவர் மணி முத்தையா முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கலந்துகொண்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி ஆகியோர் பேசினார்கள்

அதனைத் தொடர்ந்துநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்பாஜக வேட்பாளர்களை மாநில தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார்

பின்னர் அண்ணாமலை பேசியதாவது:

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கும் பாஜக தமிழகத்தில் முத்திரை பதித்து தனித்தன்மையை இந்த உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்கும் என்றார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ஆதி குளோபல் ஆதிசங்கர் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்த மூர்த்தி ஊடகப்பிரிவு தங்கவேல் சாமி வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் திருமுருகன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணன் மகேந்திரன் ஒன்றிய தலைவர் முருகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் மாயாண்டி உள்ளிட்டோரும் மதுரை புறநகர் பகுதிகளான மேலூர் உசிலம்பட்டி திருமங்கலம் நகராட்சி வார்டு வேட்பாளர்கள் மற்றும் சோழவந்தான் அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி ஏழுமலை பறவை பேரையூர் டீ கல்லுப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply