திமுகவுடன் இணைந்து பணியாற்ற ராகுல் உறுதி!

Share

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக Jவியாழக்கிழமை டெல்லி சென்றார். மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிரதமருடன் 25 நிமிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

பின்னர் மாலை 7 மணிக்கு இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர். இன்று காலை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் அவரது மனைவி துர்காவும் உடன் சென்றார்.

அவர்கள் இருவரையும் சோனியாவும், ராகுலும் வரவேற்றனர். சோனியாவுக்கு புத்தகம் ஒன்றை ஸ்டாலின் பரிசளித்தார். சோனியா முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ராகுலும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றப்பின் முதன் முறையாக சோனியா மற்றும் ராகுலை ஸ்டாலின் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பிற்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply