’’கூல் கேப்டன்’’ தோனியின் பிறந்தநாள்

Share

கேப்டன் கூல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டோனி இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழந்தவரும் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தோனியின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் தோனிக்கு சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

டுவிட்டரில் தோனியின் பிறந்த நாள் தொடர்பான ஹேஷ்டேக்குள் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன.  
சுரேஷ் ரெய்னா தனது பதிவில், ‘ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி.

நீங்கள் எனக்கு ஒரு நண்பராகவும், சகோதரராகவும் ஒரு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறீர்கள். உங்களிடம் எப்போது எதுவேண்டுமானாலும் கேட்கலாம். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுள் வழங்கவேண்டும்.

நீங்கள் ஒரு சிறந்த வீரராகவும், தலைவராகவும் இருந்ததற்கு நன்றி. ஹேப்பி பர்த் டே தோனி” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் சமூக வலைத்தள பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

Leave A Reply