மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

Share

மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கான உள்ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

சென்னை:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கான  கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி

மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கான உள்ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

மாநிலங்களுக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும்.

குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்பட்ட மாநிலங்களுக்கு நிலுவை தடுப்பூசியை விரைந்து வழங்க வேண்டும்.

Leave A Reply