மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்டுக்கு 8 சிலிண்டர்கள்! பஞ்சாப் காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி!

Share

பஞ்சாப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தலைவர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்று அறிவித்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர் சித்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையும், ஆண்டுக்கு 8 சிலிண்டர்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதுதவிர, கல்லூரி செல்லும் பெண்களுக்கு இரு சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்றும், பிளஸ்டூ தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம், 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave A Reply