15-அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தம்…

Share

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம், SAT/383,மதுரை கிழக்கு ஒன்றியம் சார்பில், மாநிலச் சங்க அறிவிப்பிற்கிணங்க 15-அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி நடைபெற்று வரும் ஒத்துழையாமை இயக்க போராட்டம் மற்றும் வரும் 07.03.2022 முதலான அனைத்து சங்கங்கள் மற்றும் ரேசன் கடை சாவிகளை மண்டல இணைப்பதிவாளரிடத்தில் ஒப்படைத்தல் அன்று முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பான கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய தலைவர் ரத்தினகுமார் தலைமையில், செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக தணிக்கை செய்ய வேண்டும் என செயலாளர்களுக்கு நெருக்கடி தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஒத்துழைப்பு நல்குவது இல்லை எனவும் வரும் 07.03.2022 அன்று சங்கங்கள் மற்றும் ரேசன் கடை சாவிகள் அனைத்தையும் இணைப்பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் மூர்த்தி, துணைத்தலைவர்கள் குருமலைச்சாமி, உபைதுல்லா இணைச் செயலாளர்கள் பெரியகருப்பன், மாலதி உள்பட செயலாளர்கள் பெரியசாமி,சித்திக், கண்ணன், விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply