கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் தடுப்பூசி!

Share

தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 

இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவிவித்துள்ளது.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முடிவு குறித்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கவில்லை. கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாக கூறப்படுவது தவறு என தெரிவித்துள்ளார். 

Leave A Reply