அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை

Share

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

 அதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்குள் சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave A Reply